கருணை...

நகரத்தில் எங்கு தேடியும்
காகத்தை பார்ப்பது அரிதாயிருந்தது

அடிபட்டு கிடந்த ஒரு காக்கை கத்த‌
ஆயிரம் காக்கைகள் கூடியது
அப்பொழுதுதான் புரிந்தது
இது
காக்கைகள் இல்லா இடமல்ல‌
கருணை இல்லா இடமென்று...

எழுதியவர் : தினைகுளம் கா.ரமேஷ் (29-Dec-12, 6:20 pm)
சேர்த்தது : kramesu
Tanglish : karunai
பார்வை : 109

மேலே