ஏக்கங்கள். (ரோஷான் ஏ.ஜிப்ரி )

எட்டு வருஷம் கழிந்த பின்னும்
கொட்டிலில வாழுறம்
கொட்டும் மழையில் கரைந்து இன்னும்
கூதலில நாணுறம்
கட்டும் வீட்டு கனவு கண்டு
தினமும் நாங்க தூங்கிறம்
பட்டுப்போன வாழ்வு துளிர்க்க
வேண்டும் என்று ஏங்கிறம்.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.