இனிய புத்தாண்டே வருக வருக ....
நண்பனே ...
நம்பிக்கையோடு விழி
இனி
நாட்களின் நகர்வுகள்
வெற்றிகளையே
உன்னுள் விதைக்கட்டும் ...!
காகித பூக்களாய்
மணம் வீசாமல்
கசங்கிப்போன
நாட்காட்டி காகிதங்களை
எண்ணி வருத்தப்படாதே ...
விழி எழு
சந்தோசப்படு ...
இருப்பதை வைத்து
மகிழ்ச்சியில் கூத்தாடு ...
இல்லாததற்கு ஏங்காதே
கனவு கான்
கனவு நனவாக
வரும் நாட்காட்டிகள்
நாள் குறிக்கட்டும் ...
இருட்டை நெஞ்சில் சுமந்து
சுருண்டுகிடந்தால்
சிலந்தியும்
வலை கட்டிவிடும் உன் மேனியில் ...
நம்பிக்கைகளை
நெஞ்சில் விதை
பார்வையால் வெளிச்சத்தை தேடு
வரும் நாட்கள்
வசந்தங்களை அறுவடை செய்யட்டும் ...
இதோ புத்தாண்டு
இனிக்கும் லட்டாய்
வாழ்க்கை உன் கையில்
உடைப்பதும் ருசிப்பதும்
உன்னால் மட்டுமே முடியும் ...
இனி
கடிகாரத்தில் துடிக்கின்ற
நொடிகள் ஒவ்வொன்றும்
உன்னை சந்தோசப்படுத்தட்டும் ...!
நண்பா
நல் எண்ணங்களை
மனதில் விதை
நம்பிக்கை நீரூற்று
சந்தோசங்களை அறுவடை செய் ...
வழக்கை ஓர் முறை
வாழ்த்து பார்
சந்தோசத்தோடு மட்டுமே ...
இனிய புத்தாண்டில்
இனிக்கும் வாழ்த்துக்களுடன் ...
***** மு.முருக பூபதி *****