அரசியல் தீர்வு
மீன்கள் வானத்தில் நீந்துகின்றன
நிலத்தில் முழுநிலா உதிக்கிறது
சிட்டுக்குருவிகள் முகிலில் கூடுகட்டுகின்றன
சாரைப்பாம்பு படமெடுக்கிறது
காகம் வெள்ளையாகிறது
கொக்கு கறுப்பாகிறது
ஏன் இந்தமாற்றம் என்று கேட்கிறேர்களா ?
இலங்கையில் அரசியல் தீர்வு வரப்போகிறதாம்