அன்பே வாழ்வோம்
காற்றோடு கவிபாடிய என்னை
கானக் குயிலாய் உன் கவிபாட வைத்தாய்
காத்திரங்கள் பல காத்தாய்
உன் காத்தரவோ என்னை ஈர்த்தது
நீ துள்ளித் திந்த பாதை எனை அழைத்தது
காவியத்திற்கு கம்பரமாயணம்
என் வாழ்கைக்கு உன் கவி மாயம்
இணைய வைத்தான் இறைவன் எமை
இணைத்திடுவான் எமை வாழ்வில்
இது திண்ணம்
வாழ்வோம் வாழ்க்கையை
சரித்திரம் படைப்போம்