நினைவின் துயரங்கள்...

சலசலக்கும்
தோட்டச் சருகுகள்...
வானம் ..
இறுகப் பற்றி உதிரும் மழை...
ஜன்னலுக்கு வெளியே
நகரும் இரவு.
மனதின் வெற்றிடம் தீண்டி
நகரும் நக்ஷத்திரங்கள்...
படர்ந்த பாசியாய்
குப்பை மனது.
நம் இணைந்த...
பயணம் விலக்கிய
உன் ஒற்றை நிழல்.
மழையும்...நெருப்புமாய்...
கசிந்து எரியும்
என் நினைவின் துயர்.
நானே விரும்பாமல்
எனது சுவாசம்...
தனியாய் நடக்கும்
என் காலடிச் சுவடு...
சிறகுகள் இழந்த
ஒற்றைப் பறவையாய்...நான்.
கூடு விலகிய பறவையாய்
உன் பயணம் நீள....
வானில் தெரிகிறது
கலைந்திருக்கும் என் வீடு.

எழுதியவர் : rameshalam (5-Jan-13, 5:42 pm)
பார்வை : 108

மேலே