Agamugan Vijay - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Agamugan Vijay |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 27-Dec-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 294 |
புள்ளி | : 20 |
அகமே முகமாய் கொண்ட அகமுகன்!
தாகம்,
இது உடலில் வந்தால்
கொஞ்சம் தண்ணீர் குடி!
மனதில் வந்தால்
தினம் எனை படி!!
இப்படிக்கு,
வாழ்க்கை...
நா வறண்டால்
தண்ணீர் குடிக்கலாம்
பார்வை வறண்டால்
குழந்தைகள் ரசிக்கலாம்
சத்தம் வறண்டால்
இசையில் நனையலாம்
சுவாசம் வறண்டால்
பூக்களை நுகரலாம்
ஸ்பரிசம் வறண்டால்
எதிரினம் இணையலாம்
ஐந்தில் எது வறண்டாலும்
தாகம் தீர்க்க தடையேதுமில்லை..
இருந்தும் பரிதவிக்கிறேன்
என்னிலையை பரிசீலிக்கிறேன்
இன்று தான் கண்டுகொண்டேன்
தாகம் புலனில் அல்ல,
என் மனதில் என்று.
அதை தீர்க்கும்
வேகத்தோடும் வேட்கையோடும்
புதிய விடியலை நோக்கி விரைகிறேன்!!
(ஒரு தமிழினப் போராளி மேடையில் பேசுகையில்,
இடைமெலிந்த பேரழகி இடையில் நுழைகிறாள்...
மக்கள் கவனம் அவள் பக்கம் சாய்ந்ததால்,
விழுந்த விதை இந்தக் கவிதை....)
நாவாடிக் கிடப்பதே என் பலமென்று நினைக்கையிலே,
பாவாடைக் கிளியொன்று பாதியிலே வந்ததினால்,
நாடோடி நடைதளர்ந்து நம் மக்கள் வரும் கதையை,
செவியோடு நிறுத்திவிட்டு செந்தமிழை தூக்கிலிட்டார்...
அவன் முன்னே அவளையும் அவள் முன்னே அன்னையையும்
அணுவணுவாய் பிறப்புறுப்பில் அரக்கர்கள் புணர்ந்தகதை,
சொன்னாலும் கேட்காமல் , உணர்விலதை சேர்க்காமல்,
பாவையவள் பின்னழகில் பார்வையினால் பாலமிட்டார்..
ஆயுதத்தால் அழித்துவிட்டான் மீதிப்பேரை அடைத்துவிட்டான்
கடவுள் என்பவர் எல்லாவற்றையும் கடந்து
உள்ளிருப்பவர் என்று விளக்கம் சொல்வார்கள்
அப்படியானால் கடவுள் உருவமா அருவமா ?
அதற்கும் அப்பாற்பட்ட வேறொன்றா ?
---கவின் சாரலன்
வலியில் உயிரைக் கொடுத்து, உயிரை கொடுத்த உயிருக்கு, உயிர் வந்ததும், உயிர் வந்தது!