Jeny Francina - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jeny Francina
இடம்:  Gobichettipalayam
பிறந்த தேதி :  08-Apr-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Jan-2014
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  0

என் படைப்புகள்
Jeny Francina செய்திகள்
Jeny Francina - Yuvabarathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2013 10:58 am

வாக்கினில் இனிமை வேண்டாம்
துன்பம் தீர்க்கும் பெண்மை வேண்டாம்
வானமழை வேண்டாம் வண்ணமயில் வேண்டாம்
வெண்ணிலவு வேண்டாம் மேவுகடல் வேண்டாம்
பண்ணுசுதி வேண்டாம் பாட்டினிமை வேண்டாம்
பட்டு கருநீல புடவை வேண்டாம்
பதித்த நல்வயிரம் வேண்டாம்
சின்னஞ்சிறு குருவி போலே நான்
திரிந்து பறந்து வர வேண்டாம்
வண்ணப் பறவைகள் கண்டு நான்
மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம்
பெண்மை வாழ்கவென்று கூத்திட வேண்டாம்
விடியும் நல்லொளி காணுதல் வேண்டாம்...

தீராத சுமைகள் வேண்டும்
ஆறாத காயங்கள் வேண்டும்
மறையாத வடுக்கள் வேண்டும்
மறைத்து வைக்க கண்ணீர் வேண்டும்
தீபம் ஏற்ற அது அணைதல் வேண்டும்
தீயென சுடும் கேலிகள் வேண்டும்
பத

மேலும்

மனதில் உறுதியை மறிக்கும் வரை நிலைத்துக்கொண்டால் மகிழ்வுடன் வாழலாம் ...நன்று 24-Jan-2014 8:31 pm
வெல்டன் ,முதல் கவிதையே தூள் கிளப்புகிறது. சிந்தனையின் கோணம் அபாரம் ! 24-Jan-2014 8:25 pm
வாழ்த்துகளுக்கு நன்றி :) 18-Dec-2013 7:14 pm
டியர் தோழி மிக அருமையான கவிதை வேண்டும் வேண்டாம் பல அர்த்தங்கள் கொடுத்தாலும் கவிதைக்கு உயீர் கொடுத்து இருக்கிறது தொடரட்டும் இந்த கவிப்பயணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 18-Dec-2013 2:46 pm
Jeny Francina - Yuvabarathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2013 6:29 pm

தளிராய் தெரிந்த காதல்
இன்று சருகு ஆகி போனதேனோ??
கடலென நினைத்திருந்தேன்
வெறும் கானல் ஆகி போனதேனோ??
ஓயாமல் சிணுங்கி நின்ற என் அலைபேசி
ஓரமாய் ஒதுங்கி நிற்கிறது!!
செத்துப் போய் கிடப்பதனை
மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்...
அசிரத்தையாய் வந்து விழும்
உன் ஒன்றிரண்டு அழைப்புகளுக்காக ...
கடற்கரை மணல் வீடாய்
அவசரமாய் அழிந்து போன
காதலுக்கு
ஆதாரமாகவேனும் இருக்கட்டுமே...
குறுஞ்செய்திகளாய் குவிந்து கிடக்கும்
சூனியமாகி விட்ட
நம் நிஜங்கள்...

மேலும்

காதலும் கற்பனையும் கலந்திருக்கும் சூனியமாகி விட்ட என் நிஜங்கள் . 26-Jan-2014 8:07 pm
குறுஞ்செய்திகளாய் குவிந்து கிடக்கும் சூனியமாகி விட்ட நம் நிஜங்கள்... // மிக அருமை... அசத்துறீங்க பா 24-Jan-2014 8:27 pm
Jeny Francina - Yuvabarathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2013 10:21 am

முதல் துளி வான்மழையென
என் தேகம் ஸ்பரிசித்து சிலிர்க்க வைக்கிறாய்...
புதிதாய் ஜெனித்த பூ மொட்டென
என் விரல் வருடி விடுகிறாய்..
சில்லென்ற சிறு காற்றாய்
என் தலை கோதி செல்கிறாய்...
பகல் பொழுதில் நிழல் திருடும்
கள்வன் ஆகிறாய்...
இரவில் சுட்டெரிக்கும் சூரியனாய்
மாற்றுகிறாய்...
பனித்துளியை பட்டாக்கி
புடவை நெய்கிறாய்...
நீலமயில் தோகையென
பொய்யுரைத்துப் போகிறாய்...

மொத்தமாய் நீ
வெள்ளைத் தாளில் ஒட்டிக்
கொள்ளும் என்
ஒருவரி கவிதையாகிறாய்...
கனவென்று நானிருக்க
பின் வந்து கண்மறைக்கிறாய் !
சட்டென்று திரும்பிப் பார்க்கிறேன்...
அத்தனையும் நனவு தான் என்கிறாய்
உன்
ஒற்றை அர்த்தப் புன்னகை

மேலும்

என் கற்பனையை கவிதையாக்கிய தங்கள் கருத்துக்கு 1000 வணக்கங்கள் :) 26-Jan-2014 8:02 pm
காதல் வரியும் கவிதை வரைந்த காதலும் கொள்ளை அழகு !! 24-Jan-2014 8:28 pm
நன்றி சகோ !! :) 18-Dec-2013 7:27 pm
அழகு ! 16-Dec-2013 11:39 am
கருத்துகள்

நண்பர்கள் (4)

Yuvabarathi

Yuvabarathi

கோபிசெட்டிப்பாளையம்,ஈரோட
user photo

கவிப் பறவை

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

Yuvabarathi

Yuvabarathi

கோபிசெட்டிப்பாளையம்,ஈரோட

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே