தமிழரசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழரசன்
இடம்:  ஆம்பூர்
பிறந்த தேதி :  09-Feb-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2013
பார்த்தவர்கள்:  176
புள்ளி:  17

என்னைப் பற்றி...

கவிதைகள் வாசிப்பதும் இயற்கையை ரசிப்பதும் எனது பொழுதுபோக்கு. சில தருணங்களில் கவிதை எழுதவும் பிடிக்கும்

என் படைப்புகள்
தமிழரசன் செய்திகள்
தமிழரசன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2015 8:56 pm

அன்று ....

உனக்காக காத்திருந்து
உள்ளுக்குள் வேர்த்திருந்து
வழியெல்லாம் பார்த்திருந்து
வருவாயாயென தவித்திருந்து

கண்களை இமைக்க மறந்த காட்சிக்காக
கால்கள் கடுக்க நான் காத்திருந்தேனே!

கண் இமைக்கும் நேரத்திலே
மின்னல் போல் வந்து விட்டு சென்றவளே,
நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு ஏனோ இனிக்கத்தான் செய்தது :

"பேச நேரமில்லை, நாளைக்கு பார்க்கலாம்"

ஆனால்
இன்றும் நான் காத்திருந்தேனே;
என்னிடம் நீ சொன்ன வார்த்தைகள்

"பேச ஒன்றுமில்லை. இனிமே என்னை பார்க்க வராதீங்க"

இதுவா காதல் வலி?
இதற்கு என்ன வழி ?

தேடுகிறேன் ஓடி விட்ட உன்னையும்,
ஒடுங்கி விட்ட என்னையும்.

வலிக்கு வழி வேதனை

மேலும்

நல்ல கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2015 10:04 am
நன்றி, 27-Aug-2015 9:37 pm
அருமை. 27-Aug-2015 9:13 pm
தமிழரசன் - தமிழரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2015 5:25 pm

என் கனவு தேசம்!
இங்கே,
ஏழைகள் யாருமில்லை
ஜாதி மத பேதமில்லை!!

பெட்ரோல் டீசல் தேவையில்லை
வாகன நெரிசல் வாழ்வில் இல்லை!
சுற்றுப்புறங்கள் அசுத்தமில்லை
சோம்பேறிகள் இங்கு யாருமில்லை!

விண்ணில் பறக்கும் வாகனமுண்டு!
அதை வெற்றிகரமாய் இயக்க,
இயந்திர மனிதர்கள் உண்டு!

பள்ளிக்கூடம் தூரம் இல்லை
பாடப் புத்தகம் பாரம் இல்லை!
இணையக் கல்வி இங்கே உண்டு - அதை
இயக்கம் இயந்திரம் அருகில் உண்டு!

அன்னை தந்தை யாவரும் உண்டு
ஆனால் அதற்கும் எல்லை உண்டு!
இறப்பு என்பது இல்லவே இல்லை,
கடும் சட்ட திட்டங்களுக்கு பஞ்சமில்லை!
காதல் மட்டும் காணாத முல்லை!!!

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 2:17 am
நன்றி! 27-Aug-2015 9:08 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2015 7:10 pm
நன்று 27-Aug-2015 5:43 pm
தமிழரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2015 5:25 pm

என் கனவு தேசம்!
இங்கே,
ஏழைகள் யாருமில்லை
ஜாதி மத பேதமில்லை!!

பெட்ரோல் டீசல் தேவையில்லை
வாகன நெரிசல் வாழ்வில் இல்லை!
சுற்றுப்புறங்கள் அசுத்தமில்லை
சோம்பேறிகள் இங்கு யாருமில்லை!

விண்ணில் பறக்கும் வாகனமுண்டு!
அதை வெற்றிகரமாய் இயக்க,
இயந்திர மனிதர்கள் உண்டு!

பள்ளிக்கூடம் தூரம் இல்லை
பாடப் புத்தகம் பாரம் இல்லை!
இணையக் கல்வி இங்கே உண்டு - அதை
இயக்கம் இயந்திரம் அருகில் உண்டு!

அன்னை தந்தை யாவரும் உண்டு
ஆனால் அதற்கும் எல்லை உண்டு!
இறப்பு என்பது இல்லவே இல்லை,
கடும் சட்ட திட்டங்களுக்கு பஞ்சமில்லை!
காதல் மட்டும் காணாத முல்லை!!!

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 2:17 am
நன்றி! 27-Aug-2015 9:08 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2015 7:10 pm
நன்று 27-Aug-2015 5:43 pm
தமிழரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2015 2:34 pm

முன்னாள், மூத்த குடிமகனே!
உன்னால் இந்த பாரதம்
இந்நாள் வரை,
பொலிவு பெற்றுக் கொண்டு தான் இருந்தது!

ஏழையாய் பிறந்து
ஏழ்மையில் வளர்ந்த போதும்
ஏணிப் படிகளைப் போல்
ஏற்றம் கண்டவன் நீ!

கனவு காணுங்கள் என
கண்ணாமூச்சி ஆடும் குழந்தைகளுக்கும்,
கட்டிளம் காளையருக்கும் - பாடம்
கற்றுத் தந்தவன் நீ!

தன்னை எரித்து ஒளி தரும்
மெழுகு போல் - தன்
இன்ப துன்பங்களை துறந்து, நாட்டுக்கு
நற்பணி செய்த நல்லவன் நீ!

அக்னி ஏவுகணையை விண்ணை நோக்கி
வெற்றிகரமாய் செலுத்தியவன் நீ!
அண்டை நாட்டவரையும் அசர வைத்தவன் நீ!

தமிழ் வழியில் கற்றிருந்தாலும்,
தன்னம்பிக்கை எனும் சுடரை ஏற்றி
தகிக்கும் நட்சத்திரமா

மேலும்

தமிழரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2015 2:16 pm

கண்களின் முன் யாவும்
கள்ளி அவளின் காற்றுப் பிம்பம்!

தொட்டு அணைக்கவும் முடியாது
தொடங்கி பேசவும் முடியாது!

என்னை சூழ்ந்த காற்றாய்
எங்கும் சூழ்ந்து இருக்கிறாள்!

என் மகிழ்ச்சியில் தென்றலாக,
என் கோபத்தில் புயலாக,

எல்லையில்லா ஆனந்தத்தை - என்றும்
எனக்கு அள்ளி தருகிறாள்!!!

மேலும்

தமிழரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2015 6:17 pm

உள்ளமே,
உனக்காக
உயிரையும் தாண்டி
உறவுகளை மிஞ்சி
உறை பனியாய்
உறைந்து கிடக்கும் - என்
உள்ளத்தை நீ
உணரவில்லையா- இல்லை
உணர்ந்தும்,
உனக்கான என்னை
உதாசினபடுத்துகிறாயா.?

மேலும்

தமிழரசன் - தமிழரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2015 12:03 pm

தீபத் திருநாளில்
வீதிகள் யாவும்
விளக்கொளியில் மின்ன,
விண்ணிற்கே ஒற்றைத் தீபமாய்
வானில் நிலா!!!

மேலும்

வெண் மேக மை எடுத்து இருள் மேகம் கை எடுத்து எழுதிய கவிதை நிலா.. 07-Aug-2015 6:07 pm
நன்றி!!!! 07-Aug-2015 12:08 pm
சூப்பர் 07-Aug-2015 12:05 pm
தமிழரசன் - தமிழரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2015 3:37 pm

கனவுகள் யாவும்
கனவாய் போனதடி!
கன்னி உன்னை எண்ணி
கண்ட கனவுகள் யாவும்
நனவாய் மாறும் என
நான் கண்ட,
கனவுகள் யாவும்
கனவாய் போனதடி!!

அன்று,
கன்னி உந்தன்
கருவிழி தன்னை
கண்ணாடி என்று எண்ணி
என் முகம் பார்த்தேன் - அதில்
உன் முகம் பார்த்தேன்!
பாவை உன்னை
பார்த்த நாள் முதல்
பாவை நீ இன்றி
பாவி நானில்லை என்றேன்!
கவி பாடவும் செய்தேன்!

ஏனோ,
கன்னி உந்தன்
இதய கதவுகள் அடைப்பு!
அதை எதிர்த்து
என் கனவு தேசத்தில்
ஓர் அமைதி போராட்டம்!
ஓர் நாள் அல்ல,
ஓர் இரு ஆண்டுகள்!

அதுவரை, அங்கே,

காகிதத்தில்
கவிதைகள் அச்சிடப்பட்டன!
காணும் இடம் எங்கும்
அவை ஒட்டப்பட்டன!
இதய கதவுகள்
தினம் த

மேலும்

சிறப்பான பதிவு... 06-Aug-2015 4:26 pm
நன்றி.... 06-Aug-2015 4:04 pm
கனவு மிக மிக அருமை 06-Aug-2015 3:59 pm
மேலும்...
கருத்துகள்

மேலே