மேகநாதன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மேகநாதன் |
இடம் | : PARUTHIPURAM |
பிறந்த தேதி | : 27-May-1965 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 370 |
புள்ளி | : 92 |
இடி எனும் அரக்கன்
அடியை தாங்காமல்
அழும் மேகத்தின் கண்ணீர்தான்
மழையோ!
காலச்சக்கரம் வறண்ட பாதையை கடக்கும் போது
மனம் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடித்து
வசந்த மண்டபத்தில் நம்மை அமர வைக்கிறது
வாடி வதங்கி உதிர்ந்த மலர்கள் போல்
வண்ணம் குறைந்தாலும் வாசம் நிறைந்து வீசி
எண்ண மழுங்கலை பட்டைத்தீட்டுகிறது
ஆன்மாவை துறந்த உடலாய் உழன்ற மனம்
ஆகாய கங்கையை எட்டிப் பிடிக்க முனைகிறது
ஆலவிழுது போல் பக்கத்துணையாய் அரவணைத்து தாங்க விழைகிறது
சாரையின் சலசலப்பாய் துவங்கிய கேவல்கள்
சர்வவல்ல சாகர அலைகளாய்
அடங்காது ஆர்ப்பரித்து ஆன்மாவை துளிர்க்கிறது
புதுசுனையில் சுரந்த நீரூற்று
புதுவெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடி
புவி சாம்ராஜ்ய சக்ரவர்த்தியாய் எனை
கவிசிம்மாசனத்தில் கொலு வைத
குழந்தை பருவத்தில் தத்தி நடந்தவன்
வீழ்ந்ததும் எழுகிறான் ... ஆனால்
முதுமை பருவத்தில் தோல்வியால்
வீழ்ந்தவன் மரணத்தை தழுவுகிறான்
எங்கே அறிவு முதிர்ச்சி?
வாழவைத்தவன் வீழ்ந்து கிடக்கிறான்
வாழ்ந்தவன் உயர்ந்து நிற்கிறான்
மழை அடிக்கப் போகிறது
நான் கவிதை எழுதப் போகிறேன்
என் நினைவில் நீயும் வந்தே
என்னை அழுக வைத்து விடாதே!
தவளைச் சத்தம் போடுகிறது
நான் காது கொடுத்துக் கேட்கிறேன்
குவளைச் சத்தம் ஏந்தி வந்தே
என் உள்ளம் கெடுத்துச் செல்லாதே!
குளிர்ந்த காற்று வீசுகிறது
நான் கனவு காணப் போகிறேன்
அந்தக் கனவில் நீயும் வந்தே
என் நினைவு கொன்று போடாதே!
தண்ணீர் வீட்டில் விழுகிறது
நான் பாத்திரம் வைக்கப் போகிறேன்
விழுந்த இதயம் என்னைக் கண்டு
நீ ஏளனம் செய்து போகாதே!
ஜன்னல் அடித்துக் கொள்கிறது
நான் சாத்தி விட்டு வருகிறேன்
என்னை சாத்தும் மிளகாய் வார்த்தை
நீ மீண்டும் வீசி விடாதே!
மின்சாரம் காணாமல் போகிறது
நான் விளக்கை ஏற்றி வைக்க
என் வறுமையை எண்ணி எழுத நினைத்த எனக்கு பணம் இல்லை பேணா வாங்க ......
வேற்று கிரகங்கள் தேடி ஏவுகணைகளை ஏவுங்கள்-அதில்
விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் தமிழில் பொறித்து ஏற்றுங்கள்
மாற்று உலகம் மனிதன் நாடி அடையும்போது-அங்கே
காற்றுடன் தமிழை சுவாசிக்க ஏற்றபடி அதை மாற்றுங்கள்
வேற்று உயிர்கள் அங்கே காணின் போற்றும் அன்பில் கூடுங்கள்
ஆற்றல் மொழியாம் தமிழில் சாற்றி நாற்றை அங்கே நடவுங்கள்
ஏழாம் அறிவை எழுப்பிட ஏற்றக் கல்வியை புகட்டுங்கள்
மூன்றாம் கண்ணை திறந்து முக்காலமும் கணித்திட முயலுங்கள்
கிரகங்கள் அனைத்திலும் பசும் கன்றுகள் நட்டு வானிலையை சாதகமாக்குங்கள்
கிரகணம் அற்று உயிர்கள் நிலைக்க அப்துல் கலாமின் பாதையில் செல்லுங்கள்!
கவிதாயினி அமுதா பொற்கொடி
திருப்புகழ் பாடிய வாய் மணக்கும் - அதில்
திருமொழி முருகன் எழில் இனிக்கும் !
கவிச்சரம் தனித்து இசைபாடும் - அதில்
அருட்சுரம் இயைந்து நசை காணும் !
திருவரமாய் சந்தங்கள் சரசம் ஆடும் - அதில்
திவ்விய தரிசனமாய் திருவுரு விழி கூடும் !
சொல்வளம் சுவைவளம் பெருகி ஓடும் - அதில்
பல்வளம் ஓங்கி நல்மனம் உள்ளொளி நாடும் !
கருச்செறிவு கந்தனின் அறுபடை வரிக்கும் - அதில்
செவிப்பறை பனித்து அருட்சிறை ஒழிக்கும் !
அறப்பொருள் அணியாகி ஆவி சபிக்கும் - அதில்
பரம்பொருள் தணிந்து அருள் சுரக்கும் !
அருளிய அருணகிரி நாதனின் கொடையால்
அகிலம் உள்ளவரை தமிழிசை வெல்லும் !
கவிதாயினி அமுதா பொற்கொடி