roohulrazmi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : roohulrazmi |
இடம் | : சிலாபம்-இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 151 |
புள்ளி | : 31 |
பொய்யிலாக் கவிதை நெய்யலாம் என்று நினைப்பவன்
திருவாய் மொத்தமும்
மதுவாய் நிறைந்தது
வருவாய் மொத்தமும்
மெதுவாய்க் கரைந்தது
விதிவிலக்காய் வீதியில்
மதுவழக்கு நடந்தது
வீதிவிளக்கு பாதியில்
மின்னிழக்க அணைந்தது
கும்மிருட்டுப் போர்வையில்
பணத்திருட்டு நடந்தது
குடிகாரன் பார்வையில்
கடிகாரம் தொலைந்தது
மதுவிலக்குக் கோரியே
மணவிலக்கு நேர்ந்தது
குலவிளக்குக் காரியே
தலைமுழுகிச் சோர்ந்தது
குடிபோதை தெளிந்ததும்
நடைபாதை தெரிந்தது
குடிப்போரை தவிர்ந்ததும்
உபாதை நீங்கியது
சாராயம் சாராத
சாராராய் மாறிடுவோர்
ஆராயும் பேராக
சீராகத் தேறிடுவர்
எந்திரிக்கும் எதிரி தான்
நட்புக்குப் பக்கம்
சுதாரித்த நண்பனே
பகை மூண்ட புகை.
எதிரில் தெரிபவன் எதிரி
எளிதில் தெரியாதவன் நண்பன்.
எளிதில் தெளிபவன் எதிரி
தெளிவில் எதிர்ப்பவன் நண்பன்
என்னை உருவாக்குபவன் எதிரி
என்னில் உருவாகுபவன் நண்பன்
தன்னில் நிலைப்பவன் எதிரி
என்னில் நிலைப்பவன் நண்பன்
எதிர்ப்பைக் காட்டுபவன் எதிரி
பகையை மறைப்பவன் நண்பன்
எதிர்த்து வாழ்பவன் எதிரி
எதிர்க்க வாழ்பவன் நண்பன்
எட்டி எறிபவன் எதிரி
ஒட்டி உறிபவன் நண்பன்
தட்டிக் கழிப்பவன் எதிரி
தட்டில் கழிப்பவன் நண்பன்.
எதிரிக்கு எதிரி நண்பன்
நண்பனுக்கு நண்பன் எதிரி
எதிரே நிற்க வைத்துப் பார்க்க
நண்பனைக் க
கொஞ்சம் விஞ்சி உண்டேன்
என்னுணவைக்கூட என்னால்
சுமந்து செல்ல முடியல….
நான்குமணி நேரம் என்னுணவை
இரைப்பையே சுமக்காத போது
நாற்பது வாரங்கள் எனையுன்
கருப்பை எப்படி சுமந்ததோ?
ஒருவேளை உணவுகூட
உன் உடம்பில் ஒட்டல
வாந்தியாய் வெளித்தள்ளவே
அட்டையாய் ஒட்டிநின்றேன்
பகல் கனவாய் உன்
உறக்கம் இருக்க
இராப்பகலாய் நான்
உறங்கிக் கழித்தேன்.
உன் உயிர் குடித்தாவது
நான் பிறக்கத் துடிப்பதை
என்பிள்ளை உதைக்கிறான் என்று
என் அப்பனுக்கு நீகாட்டி
மடத்தனமாய் மகிழ்ந்திருந்தாய்!
கருச்சிறையில் விடுதலைபெற
உன்னையல்லவா நான்
பணயக் கைதியாக்கினேன்!
வேதனையின்போது காலிரண்டும்
பின்னிக் கொள்ளும் நியதிக்கு
எல்லைக்குள் வாழ்ந்தவன்
எல்லை மீறினான்
மனைவியின்
தொல்லையால்
சுகத்தை வாங்க
சுகத்தையே விற்றான்
மனைவியும் பணமும்
கன்னிக்கழியாமலே இருந்தது
கணவன் கனவானான்
கனடாவில் பிணமானான்
கனவான்கள் புகழ்ந்தார்கள்
காசுக்கார விதவையென்று
திருவாய் மொத்தமும்
மதுவாய் நிறைந்தது
வருவாய் மொத்தமும்
மெதுவாய்க் கரைந்தது
விதிவிலக்காய் வீதியில்
மதுவழக்கு நடந்தது
வீதிவிளக்கு பாதியில்
மின்னிழக்க அணைந்தது
கும்மிருட்டுப் போர்வையில்
பணத்திருட்டு நடந்தது
குடிகாரன் பார்வையில்
கடிகாரம் தொலைந்தது
மதுவிலக்குக் கோரியே
மணவிலக்கு நேர்ந்தது
குலவிளக்குக் காரியே
தலைமுழுகிச் சோர்ந்தது
குடிபோதை தெளிந்ததும்
நடைபாதை தெரிந்தது
குடிப்போரை தவிர்ந்ததும்
உபாதை நீங்கியது
சாராயம் சாராத
சாராராய் மாறிடுவோர்
ஆராயும் பேராக
சீராகத் தேறிடுவர்
தூரத்தில் யாரோ
துருவிப் பார்ப்பதாய்
ஆறாம் புலன்
சொல்லியது
சரிவாய் நின்று
தொட்டுப் பார்த்ததும்
சரியாய்ச் சரிந்தான்
மேனியில்
கஞ்சிவாசம் கூட
போகாத
புத்தம் புதிய சட்டை
உண்மையில் எனக்குப்
பிடித்தது
வேண்டும் வேண்டும் என்று
உள் மனது சொல்லியது
முதல் பார்வையிலேயே
விரும்பியது
எனக்குக் கூட சங்கடம்தான்
வெட்கத்தை விட்டுக்
கேட்டால் என்ன?
கேட்கவே வேண்டாம்
சட்டையைக் கழற்றுவோம்
யார் என்ன சொல்ல.
ஒவ்வொரு பொத்தானையும்
மெதுவாகக்
கழற்ற ஆரம்பித்தேன்
யாரும் தடுக்கவில்லை
பின்னால் இருந்து யாரோ
தோளில்
தட்டியது விளங்கியது
பணிப்பெண் கேட்டு
சுற்றித் தந்தாள்
அண்ணா
வடை சுடும் வாடை
காக்கை
மூக்கைத் துளைத்தது
சுட்ட வடைக்கு கிட்ட
வந்து
தட்டிச் சென்றது
கிளைத்த மரத்தில் களைத்த
காகம்
நிலைத்து நின்றது
உழைத்த பாட்டி கலைத்துப்
பார்க்க
பிழைத்துப் போனது
தெரிய வந்த நரியில்
ஒன்று
திட்டம் போட்டது
கருமைக் காகம் பெருமை
சொல்லி
அருமை என்றது
இனிக்கும் குரலில் தொனிக்கும்
பாடல்
படிக்கப் பணித்தது
காக்கை நரியின் வாக்கை
நம்பி
நாக்கை அசைத்தது
ஏந்திய வடையோ வாந்தியைப்
போல
தரைக்கு வந்தது
விழுந்து விட்ட உழுந்து
வடையை
நரியும் விழுங்கியது
பிஞ்சு மனதில் நஞ்சு
விதைக்கும்
பள்ளிப் பாடம்
காகம் போல யோகம்
கிட்ட
களவே வழி!