ஆண்டிச்சாமி மனோஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆண்டிச்சாமி மனோஜ் |
இடம் | : நத்தம் |
பிறந்த தேதி | : 14-Feb-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 102 |
புள்ளி | : 0 |
அப்பாவுக்கான என் சைக்கிள்.....
***********************************************
ஊரில் முதல் சைக்கிள் வாங்கியதொன்றும்
என் அப்பா இல்லை,
அதுவரை,
சித்திரைத் திருவிழாவில்
ராட்டினத்தையும், தேரையும்
தொட்டுப் பார்ப்பதுபோல் தான்
ஊரார் சைக்கிளையும்
தொட்டுத் திரிந்தேன்...
ஏக்கப் பெருமூச்சின்
இறுதியொரு நாளில் வாய்க்கப் பெற்றது
அப்பாவுக்கான என் சைக்கிள்.....
அவர் பயன்படுத்தியதை விட
நான் துடைத்ததில் தான்
வண்ணங்கள் போய்விட்டதாக
கவலைப்பட்டார்.
கைப் பெடலில் துவங்கி
கால் பெடலுக்கு
தனியாக நான் முன்னேறிய அன்று,
என் ஊர் வழியாக சென்ற
முதல் விமானமும் அதுதான்
முதல் பயணியும் நான்தான்..
என்
காதலை
மறந்துவிட்டேன்
என்று
சொல்லும்
விக்கிரமாதித்யன்களுக்கு
தெரிவதில்லை!
அதன்
நினைவுகள்
வேதாளமாய்
மனதில் பயணிக்கின்றன என்று...
-பார்த்திபன்
மீட்டர் மீட்டராய்
துணிக்கடைகளிலும்
கிலோ கிலோவாய்
மளிகை கடைகளிலும்
கோப்பை கோப்பையாய்
தேநீர் கடைகளிலும்
மூட்டை மூட்டையாய்
நிமிரும் கட்டிடங்களிலும்
மில்லி மில்லியாய்
மதுக்கடைகளிலும்
பக்கம் பக்கமாய்
அச்சகங்களிலும்
குச்சி குச்சியாய்
தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும்
சிதைந்துக் கொண்டிருக்கலாம்
இந்தியாவின் கனவுகள்.
--கனா காண்பவன்
என்னய்யா 2016 பொதுத் தேர்தலுக்கு எவ்வளவோ நாள் கெடக்கது அதுக்குள்ள உங்க கட்சி தேர்தல் அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடப் போகுதாமே.
ஆமாய்யா. எங்க கட்சியின் முக்கியக் குறிக்கோளே கல்வித் தரத்தை உயர்த்தறது தான்.
சரி அதுக்கு என்ன செய்யப் போறீங்க?
நாங்க அடுத்த வருஷம் நடக்க இருக்கும் தேர்தல்ல ஜெயிச்சா
தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எல்லாப் பாடத்திலேயும் முழு மதிப்பெண்கள வழங்கிடுவோம். 10, 12 வகுப்புத் தேர்வு எழுதற எல்லாருக்கும் முறையே 500/500, 1200/1200 தந்திடுவோம்.
இதில்லென்ன லாபம்?
யோவ் என்னய்யா இதுகூட்த் தெரியாம கேள்வி கேக்கற