ஆன்றனி ஜெலஸ்டின் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆன்றனி ஜெலஸ்டின் |
இடம் | : குருசடி,நாகர்கோவில். |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 9 |
வாசகன்
என்னைத் தாலாட்டும்
தாயாய்..........
என்னில் இணைந்ந
மனைவியாய்........
என் பாசத்தைப் பகிர்ந்திட்ட
சகோதரியாய்........
என் நட்பில் கலந்திட்ட
தோழியாய்........
என் ஆசை
மகளாய்........
என் வாழ்வின்
பல படிநிலைகளில்
கலந்திட்ட
பெண்மை வாழ்க........!
அங்கொரு பக்கம்
இங்கொரு பக்கம்
சென்று சென்றுவருவது
உன் கண்கள் மட்டுமா.....?
என் கால்களும் தானே...
எப்பக்கம் சென்றாலும்
அப்பக்கம் உன் முகமே.....!
காதல் கதவைத்திறந்து வைத்த
உன் கண்களுக்குச்
செல்ல வேண்டும்
கோடி நன்றி.........!
ஓடிவா......என் அருகில்
வார்த்தையால் அல்ல
என் வாழ்வால்
உன்னில் இணைய..........!!!!
அங்கொரு பக்கம்
இங்கொரு பக்கம்
சென்று சென்றுவருவது
உன் கண்கள் மட்டுமா.....?
என் கால்களும் தானே...
எப்பக்கம் சென்றாலும்
அப்பக்கம் உன் முகமே.....!
காதல் கதவைத்திறந்து வைத்த
உன் கண்களுக்குச்
செல்ல வேண்டும்
கோடி நன்றி.........!
ஓடிவா......என் அருகில்
வார்த்தையால் அல்ல
என் வாழ்வால்
உன்னில் இணைய..........!!!!
காதல் தீபத்தைக்
கண்களால் ஏற்றி வைத்து
எங்கே சென்றாய்.....
விழியால் புது வழிதந்தாய்
வீசும் காற்றில் மாற்றமில்லை
வீசி சென்ற பார்வையோ
பல யுகம் கடந்த
உணர்வைத் தருவதேனடி.......
எல்லாமாகி என்னைக்
காந்தவிழியால் கவர்ந்திழுத்தாய்
கருவண்டான உன்
கயல் விழியில்
கரைந்தேன்....
உன்னால் வாழ்வேன்
வா என் அருகில்.............
காதல் தீபத்தைக்
கண்களால் ஏற்றி வைத்து
எங்கே சென்றாய்.....
விழியால் புது வழிதந்தாய்
வீசும் காற்றில் மாற்றமில்லை
வீசி சென்ற பார்வையோ
பல யுகம் கடந்த
உணர்வைத் தருவதேனடி.......
எல்லாமாகி என்னைக்
காந்தவிழியால் கவர்ந்திழுத்தாய்
கருவண்டான உன்
கயல் விழியில்
கரைந்தேன்....
உன்னால் வாழ்வேன்
வா என் அருகில்.............
மேடை தனிலேறி
மேன்மைத் தமிழ்ச்சொல்லைப்
பாடையில் வைப்பாரடி-கிளியே
பாழும் தமிழரடி....
சாதி குலமென்றே சர்ச்சை
தனை வளர்த்தே
ஓதீப் பிரிவாரடி-கிளியே
ஒன்றியே வாழாரடி........
அரசியல்வாதி பதவிக்கு
மனிதன் தேவை!
~இந்திய பிரஜையின் குரல் (பிரபாவதி வீரமுத்து)
அட போடா
நீ போனால்
நான் என்ன இறந்தா போவேன்.?
இழந்தது ஏராளம் இதில்
நீ சாதாரணம் தான் .
மனித பிறவி என்றாலும்
மனதளவில்
கல்லாகவே வாழ்ந்திருந்தேன் ,
கல்லுக்குள் ஊடுருவும்
காற்றாக நீ நுழைந்தாய் ,
காகித துண்டுகளில்
கசங்கிய என் கிறுக்கல்களை
கவிதையென நீ ரசித்தாய் ,
மாற்றம் வேண்டும் என்றாய்
மகிழ்ச்சி கிடைக்கும் என்றாய் ,
கல்லான என் மனம்
கரைந்திடும் வேளைதனில்
இரு கண்களை கட்டி காட்டினில்
விட்டு விட்டாய்,
அட போடா
கலங்கி நிற்க நான் என்ன
சராசரி பெண்ணா ?
காட்டுக்கும் வழி கற்றுக்கொடுக்கும்
கல் மன பெண் .!!!
மூன்றெழுத்தில்
என் உயிர் மூச்சு
கைநீட்டி பின்
கைகட்டி சமூகத்தின்
அவலமாகாமல்.........
கைக்கொடுத்துப் பின்
கைத்தட்டுப் பெற்றுச்
சமூகத்தின்
அடையாளமாவோம்......!