காதல் கதவு
![](https://eluthu.com/images/loading.gif)
அங்கொரு பக்கம்
இங்கொரு பக்கம்
சென்று சென்றுவருவது
உன் கண்கள் மட்டுமா.....?
என் கால்களும் தானே...
எப்பக்கம் சென்றாலும்
அப்பக்கம் உன் முகமே.....!
காதல் கதவைத்திறந்து வைத்த
உன் கண்களுக்குச்
செல்ல வேண்டும்
கோடி நன்றி.........!
ஓடிவா......என் அருகில்
வார்த்தையால் அல்ல
என் வாழ்வால்
உன்னில் இணைய..........!!!!