பிரபாகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரபாகரன் |
இடம் | : கம்பம் |
பிறந்த தேதி | : 01-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 8 |
நான் ஒரு ஏமாளி....ஆனாலும் கலங்க மாட்டேன் அவளை நினைத்து நினைத்து கவிதைகளை எழுதுவேன் அவளை சேரும் வரை இல்லை நான் சாகும் வரை......
பாவி மக பெத்தவன இப்படி பாதியில விட்டாயே ..
கனவுல நீ இல்ல ,
உன் கை விரல் பிடிக்கவும் வழி இல்ல.....
காதலும் , கடவுளும் ஒன்றுதான் இந்த இரண்டுமே என்றுமே கல்லாகதான் இருக்கும்....ஆனாலும் கடவுளும் காதலும் இல்லாத உலகே இல்லை.......
கண்ணீரானவளே........!-வித்யா
காற்றெல்லாம்
வெளியேற்றி
வெற்றிடத்தில்
எனைநிறுத்தி
அறை கதவு நீ தாழிட......
கட்டெறும்பொன்று
கால்கடித்து கெஞ்சியதென்று
நீ சொன்ன கதையெல்லாம்
நான் ரசித்தேன்............!
கறுத்த பறவையொன்று
சிவந்த சிறகோடுவந்து
ஏகாந்த அழகில்
உன்னாடை சுமந்த
பழம் கொத்த......
மனக்கண்ணில் பேனா
தேடுகிறேன் கவிவடிக்க..........!
எங்கே நீயிருந்தாலும்
என் கனவுகளின்
மதில் மேல் நீ நடைபோட....
உலகின் அழகெல்லாம்
உன் பாதம் வழி வழிந்தோடிட
உனை நோக்கியே
நீண்டிடும் எனது கரங்கள்
கவியால் அணைத்திட.........
உன் செவிநெருங்கி
ரகசிய சேதிசொல்ல
தவித்திருந்த என் ஈரிதழ்
வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.
என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.
கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு
பூக்களையே காயப்படுத்தும்
காகித கத்திகளாய்
பாட புத்தங்கள்...... !!!
சுமைகளே அழுகின்றது
பிஞ்சுகளின்
வலிதாங்கமுடியாமல் .....!!!
மீன்கள் துள்ளுவதெல்லாம்
ருசிப்பதற்க்கே என
ரசிக்கும் பள்ளிக்கூட
பண பசிதீரா திமிங்கலங்கள் ...!!!
கற்றுதர தெரியாதாய்
கற்களை மட்டும்
கட்டிக்கொண்ட கல்விக்கூடங்கள்...
இறகுகளையே
இறக்கைகளாய் எண்ணி
சிகரத்தில் பறக்க
பழக்குவிக்கும் பட்டாம்பூச்சியாய்
பள்ளிக்குழந்தைகள்....!!!!
ஏ சி அறைகளுக்குள்ளும்
புழுக்கமாய்
புழுங்கும் மனிதர்கள் ....
பளபள கண்ணாடிகளில் தெரிகிறது
மகிழ்ச்சி
மங்கிப்போன முகங்கள்
ஏனோ ......
மடிக்கப்பட்ட ஆடைகளில
காதலும் , கடவுளும் ஒன்றுதான் இந்த இரண்டுமே என்றுமே கல்லாகதான் இருக்கும்....ஆனாலும் கடவுளும் காதலும் இல்லாத உலகே இல்லை.......
அன்று மழையில் நனைந்தேன் நீ என்னை அன்பாக திட்டினாய் ஆனால் இன்றும் மழையில் நனைகிறேன் திட்ட நீ இல்லை என்னும் போது மழை துளியில் என் கண்ணீர் உனக்கு தெரியாமல் கரைகிறது.....
என் அன்பே ...
நான் உனக்கு எந்த தவறும் செய்யவில்லை ஆனாலும் ஏனோ என்னை தனியே விட்டு சென்று விட்டாய் ...
நான் உன்னை காதலித்ததுதான் தவறு என்றால் அந்த தவறை தொடர்ந்து செய்வேன்.....
அன்று மழையில் நனைந்தேன் நீ என்னை அன்பாக திட்டினாய் ஆனால் இன்றும் மழையில் நனைகிறேன் திட்ட நீ இல்லை என்னும் போது மழை துளியில் என் கண்ணீர் உனக்கு தெரியாமல் கரைகிறது.....
என் அன்பே
நான் கவலை படும் போதுதான் அழகாக கவிதை எழுதுவேன்
என்று தெரிந்துதான் என்னை விட்டு சென்றாயோ.......