samhanda - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  samhanda
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Jun-2013
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  1

என் படைப்புகள்
samhanda செய்திகள்
samhanda - nuskymim அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2014 7:46 am

மண்ணில் தவழும் என் மடி மீன்
இரவின் விண்மீன் ஒளிரும் உன் முகமே
கண்டே தினமும் என் நொடி தேயும்
பல நாள் கண்ட கனா தீரும்

விண் மண் ஆளும் அவன் ஒருவன்
என் நெஞ்சம் குளிர வெண்ணுதிரம் தந்தே
அம்மா என்று நீ அழைப்பது கேட்க
இன்னும் கூடுமே என் தாய்மை தாகம்

மேலும்

வாழ்த்துக்கள் தோழரே வாழ்க வளமுடன் 30-Aug-2014 1:38 am
மிக அருமை நண்பரே கவி வரிகளும் படமும் 07-Aug-2014 11:23 pm
விண் மண் ஆளும் அவன் ஒருவன் என் நெஞ்சம் குளிர வெண்ணுதிரம் தந்தே அம்மா என்று நீ அழைப்பது கேட்க இன்னும் கூடுமே என் தாய்மை தாகம் சிறப்பு 02-Aug-2014 11:01 pm
அழகோவியம்... 02-Aug-2014 4:28 pm
samhanda - nuskymim அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2014 7:39 pm

வடுகபட்டியில் பிறந்த
பண்டிதனே
பத்து வயதில் கவி படைத்த
காவியனே
பெரியார் அண்ணா வழிதொடர்ந்த
முத்தே
பாரதியில் பாசமிகுந்த
வைரமே

என்ன சொல்லி விழுகிறது
இந்த மழைத்துளிகள்
உன் பெயர் உச்சரித்தே
மண்ணில் புதைகின்றனவே ....
ஆம் உனக்கு அகவை அறுபதோ
வாழ்த்துப்பாட வந்ததோ இந்த மழைத்துளிகள்

ஏய் மழைத்துளிகளே
என்ன நினைத்தீர்கள் என் கவிஞனை
அவனை வாழ்த்த உமக்கு தகுதி உண்டோ.....?

அவன் வைகறை மீன்கள்
உங்களால் நெருங்க முடியாது
அவன் நிழல்களில் அடியெடுத்து வைத்தவன்
உங்களால் தொடவே முடியாது
ஏன் உங்களுக்கு இந்த ஆசை
அவன் திருத்தி எழுதுவான் உங்கள் தீர்ப்புகளை
இங்கிருந்து ஓடோடி

மேலும்

இல்லை அம்மா அவர்கள் அஞ்சல் முகவரியை மாத்திரம்தான் தந்தனர் 12-Jul-2014 8:16 pm
சமர்பிக்க இன்றோடு கடைசிநாள். மின் அஞ்சலில் அனுப்பி வைக்கலாமா?? அப்படி என்றால் முகவரி கூறவும். 12-Jul-2014 4:44 pm
நன்றி வருகைக்கு 12-Jul-2014 4:37 pm
நன்றி அன்பரே 12-Jul-2014 4:37 pm
samhanda - nuskymim அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2014 10:42 pm

உதிரம் சேர்த்து உடல் தந்தவள்
உடலால் மட்டும் என்னை பிரிந்தவள்
உலகுக்கு மட்டும் அவள் இறந்தவள்
என்னுடனே என்றும் மனதில் இருப்பவள்

பிறர் கண்களுக்கு மண்ணறையில் வாழ்பவள்
என் கண்களுக்கு உயிரோடு இருப்பவள்
என்னை விட்டு என்றும் பிரியாதவள்
என்னை ஈன்றெடுத்த தாய் அவள்

என் சொல்லுக்கு சொந்தக்காரி அவள்
என் செயலுக்கு வித்திட்டவள் அவள்
என்னை பொன்னாய் சுட்டவள் அவள்
என்றும் புன்னகையோடு வாழவைத்தவள் அவள்

மண்ணறை கண்டாள் அவள் என்றோ
என் வழக்கை வானம்பாடி அற்றது
அவளால் தொலைந்த அந்த வானம்பாடி
மீண்டும் வாழ்வில் வட்டம் போடாதோ.....?

மேலும்

மனம் தொட்ட வரிகள் .. வாழ்த்துக்கள் ... கவி சிறப்பு 11-Jul-2014 11:55 am
நன்றி அம்மா 05-Jul-2014 8:06 pm
நன்றி அம்மா 05-Jul-2014 8:06 pm
நன்று ! 05-Jul-2014 7:30 pm
samhanda - nuskymim அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2014 10:42 pm

உதிரம் சேர்த்து உடல் தந்தவள்
உடலால் மட்டும் என்னை பிரிந்தவள்
உலகுக்கு மட்டும் அவள் இறந்தவள்
என்னுடனே என்றும் மனதில் இருப்பவள்

பிறர் கண்களுக்கு மண்ணறையில் வாழ்பவள்
என் கண்களுக்கு உயிரோடு இருப்பவள்
என்னை விட்டு என்றும் பிரியாதவள்
என்னை ஈன்றெடுத்த தாய் அவள்

என் சொல்லுக்கு சொந்தக்காரி அவள்
என் செயலுக்கு வித்திட்டவள் அவள்
என்னை பொன்னாய் சுட்டவள் அவள்
என்றும் புன்னகையோடு வாழவைத்தவள் அவள்

மண்ணறை கண்டாள் அவள் என்றோ
என் வழக்கை வானம்பாடி அற்றது
அவளால் தொலைந்த அந்த வானம்பாடி
மீண்டும் வாழ்வில் வட்டம் போடாதோ.....?

மேலும்

மனம் தொட்ட வரிகள் .. வாழ்த்துக்கள் ... கவி சிறப்பு 11-Jul-2014 11:55 am
நன்றி அம்மா 05-Jul-2014 8:06 pm
நன்றி அம்மா 05-Jul-2014 8:06 pm
நன்று ! 05-Jul-2014 7:30 pm
samhanda - nuskymim அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2014 6:53 pm

இது என்ன உலகம்
ஒரு கண்ணில் அமுதையும்
மறு கண்ணில் தீயையும்
வைத்துப்பார்க்கிறதே.....

இது நியாயமா ....?
சிறுபான்மை என்றால் ஏனோ ஏளனம்
மண்ணில் பிறந்தபின்
உன்னையும் என்னையும் பிரிப்பது
இந்த மதங்கள்தானா ...
ஏன் இந்த அவலம்
ஜாதி மதம் குல பேதம்
இன்னும் எத்தனை காலம்

உனக்கு ஒரு துன்பம் என்றால்
உன்னை பெற்றவள் அழுகிறாள்
எனக்கு துன்பம் என்றால்
என்னை பெற்றவள் அழுகிறாள்
ஏதோ வகையில் நானும் நீயும்
ஒரு தாய் பிள்ளைகள்தான்

இன்று நீ ஆட்சியுடையவன்
நாளை நீயும் மண்ணில் மாயும் ஒரு ஜடம்
அதற்குள் ஏன் இந்த கொடுமை
சிறுபான்மையை அழித்தால்
நீயும் மண் வென்று விடலாமா
நீ ம

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 21-Jun-2014 10:45 am
இதென்ன கொடுமையா இருக்கு. இதற்கு விடிவே இல்லையா?? படத்தை பார்க்கவே முடியவில்லை. இதனை அனுபவிப்பவர்களின் பாடு எப்படியோ?? 20-Jun-2014 5:00 pm
சிறுபான்மை என்றால் ஏனோ ஏளனம் மண்ணில் பிறந்தபின் உன்னையும் என்னையும் பிரிப்பது இந்த மதங்கள்தானா ... ஏன் இந்த அவலம் ஜாதி மதம் குல பேதம் இன்னும் எத்தனை காலம் நன்று நட்பே...............வாழ்த்துகள்................ 20-Jun-2014 3:06 pm
மனம் வலிக்கிறது படத்தைக் கண்டவுடன் ....! படைப்பு சிறப்பு ! 20-Jun-2014 2:44 pm
samhanda - nuskymim அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2014 9:56 am

கல்லறையில் பூக்கும்
கள்ளிப்பூக்களே
என் கல்லறையையும் கொஞ்சம்
நீங்கள் அலங்கரியுங்கள்
நாளை என் காதலி வருகிறாள் ....

கடற்கரை படரும்
இராவணன் மீசையே
என் கல்லறையை முற்றாக
நீங்கள் போர்த்திக்கொள்ளுங்கள்
நாளை என் காதலி வருகிறாள் ....

முற்றத்தில் சிரிக்கும்
சிவந்த ரோஜாவே
உங்கள் முட்களால் மட்டும்
என் கல்லறைக்கு வேலி கட்டுங்கள்
நாளை என் காதலி வருகிறாள் ....

பாலை வனம் வீசும்
வெப்ப காற்றே
இந்த மயானத்திலும்
உங்கள் முகம் காட்டி செல்லுங்கள்
நாளை என் காதலி வருகிறாள் ....

பௌர்ணமியை உண்ணும்
அமாவாசையே
உங்கள் காரிருரால்
என்னை புதைத்திடுங்கள்
நாளை என் காதலி வருகிறாள்

மேலும்

நன்று நண்பா!. 30-Apr-2014 9:08 pm
அருமை ! 30-Apr-2014 8:20 pm
இதுவன்றோ உண்மை காதல் ... உள்ளத்தை உருக்கும் வரிகள் நுஸ்கி. அருமை . 30-Apr-2014 10:45 am
மிக அருமையான காதல் .. 30-Apr-2014 10:11 am
மேலும்...
கருத்துகள்

மேலே