எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  கலாச்சாரம் என்ற பெயரில்
எத்தனையோ பேரை அடிமை செஞ்சாச்சு
கலாச்சாரம் என்ற பெயரில்
மனிதத்தை மண்ணுக்குள் புதைச்சாச்சு
கலாச்சாரம் என்ற பெயரில்
உயிர்களின் உணர்வுகளை காய படுத்தியாச்சு
கலாச்சாரம். அந்த கலாச்சாரம்
எது தான் அந்த கலாச்சாரம்

"நம்ம கலாச்சாரம் தான் மிக சிறந்தது
உலகிலேயே மனிதர்களுக்கு அது தான் உகர்ந்தது"
என்று பெருமை பேசுவோரை பார்த்தேன்

ஒருவன் தாயை தெய்வம் என்று சொன்னான்
அவனே அவளை மாதம் நான்கு நாள்
கொள்ளையில் உக்கார வைத்தான்

மகளை ஆத்தா என்று சொன்னான்
பூ பெய்திட்ட நாள் முதல் அவளை
அவனே சந்தை பொருள் ஆக்கினான்

காதலிக்கு கவிதைகள் ஆயிரம் பாடினான்
ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்
பதில் வரலை
பளார் என்று ஒரு சத்தம் தான் வந்தது

ஆண்களுக்கே உரிமை கொடுக்கும் இந்த கலாச்சாரம்
அதற்க்கு பெயர் மட்டும் கலா என்று பெண்ணின் பெயர்

விதவையின் கண்ணீரை துடைக்காத கலாச்சாரம்
புடவையின் சிலுவையில் பெண்களை அடக்கும் கலாச்சாரம்
இது தான் நம் கலாச்சாரம். உலகின் சிறந்த கலாச்சாரம்  

மேலும்

சிரிக்கலாமே 

அழுகையில் பிறக்கிறோம் 
 அழுகையில் மறைகிறோம் 
இடைபட்ட காலத்திலாவது 
 வாய்விட்டு சிரிக்கலாமே 
 பிறரையும் சிரிக்க வைக்கலாமே   

 ஒரே சுவை மட்டும் இருந்தால் 
 உணவு ருசிக்காது வாழ்க்கையிலும் 
 இன்பம் மட்டும் இருந்து விட்டால் 
 அதன் அருமை புரியாது   
 துன்பம் கடந்து கிடைக்கும் இன்பம் 
 பாகற்க்காய் பொரியலில் ஒளிந்திருக்கும் வெள்ளம் போல   

 வெற்றிகள் மட்டுமே இருந்துவிட்டால் 
 முயற்சிகள் இருக்காது  சோம்பல் தான் இருக்கும் 
 தோல்விகள் இல்லாமல் போய்விட்டால் 
 பாடங்கள் இருக்காது பகுமானம் மட்டும் தான் இருக்கும்   
 தோல்வியில் கிடைத்த பாடத்தில் கிடைக்கும் வெற்றி 
 பள்ளிக்கூட காதலியின் முத்தத்தை போல   

 மிச்சம் இருக்கும் வாழ்விற்கு முதல் நாள் இன்று 
 சொச்சமாக வாழாமல் அதை சுகமாக வாழலாமே   

 கண்மூடிகொண்டு உலகம் தீயது என்று 
 கேனைத்தனமாக வாழாதே 
 நீ கண்மூடும் நாள் அன்று
 நூறு பேர் அழும் படி வாழ்       

மேலும்

  ரசிகனே
  
 சுனாமி போல் வீசுபவன் விமர்சகன் 
தென்றலை போல் வீசுபவன் ரசிகன் 

அளிக்காத நீதிபதி அரியாசனத்தில் 
அவனாக அமர்ந்துகொள்பவன் விமர்சகன் 

அழியாத நினைவுகளை மனதுக்குள் சேர்த்து 
அழகாக எதையும் பார்ப்பவன் ரசிகன் 

ரசிப்பவனே 
எதிலும் அழகை மட்டும் பார்ப்பவனே 
வாடிய பூவிலும் வண்டு வரும் என்று 
எடுத்துக்காட்டு சொல்பவனே 

நிலவே இல்லா அம்மாவாசை இரவிலும் 
வானின் அழகை விழிகளால் அளப்பவனே 
குற்றம் புரிந்த உயிர்களிடம் கூட 
கல்லுக்குள் ஈரம் தேடுபவனே 

இசை கச்சேரியில் சுவரம் தவறி விட்டால் 
புது ராகம் பிறந்ததென்று புத்துணர்வாய் பேசுபவனே 
உணவிலே சிறிதளவு உப்பு குறைந்து விட்டால் 
"ரத்தம் சுத்தமாகும்" என்று சுவைத்து உண்பவனே 

ரசித்துக் கொண்டே இரு 
உன் ரசனையில் தான் இந்த உலகம் பிழைக்கிறது 
ரசிக்கும் உள்ளங்களுக்கு தான் உயிரினங்கள் உழைக்கிறது 

ரசித்துக் கொண்டே இரு 
உன் ரசனையில் தான் பூக்கள் அழகாய் தெரிகிறது 
அழகில் தான் கவிதைகள் பிறக்கிறது 

ரசித்துக் கொண்டே இரு 
ரசனையில் தான் மகிழ்ச்சி பிறக்கிறது 
ரசனைகள் தான் விமர்சனத்தை மறக்க செய்கிறது 

ரசித்துக் கொண்டே இரு ரசிகனே 
உனக்கு நான் முதல் ரசிகனே   

மேலும்

 கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து 

 வழுக்கை விழுந்த தலை தான், ஆனால் 
 வழுக்கி விழாத தலைவர்   
 மஞ்சள் துண்டு தோளில் இருக்கும் 
 நெஞ்சில் தமிழ் தாய் மேல் காதல் இருக்கும்  
 எதுகை மோனை இவருக்கு அடிமை, எழுத்துக்கள் 
 எது கைக்கு வந்தாலும் அது கவிதை   
 எதிரியை தூற்றி பேசும்பொழுதும், 
 சொல்லும் சொற்களில் இனிமை குறையாது   
 அரசியல் ஒரு நாகரீகம் என்றால் இவர் 
நாகரீகம் உருவாகிய நதிக்கரை   
 அரசியல் ஒரு கலை என்றால் இவர் 
அந்த கலையின் ப்ரஹ்மமா   
 அரசியல் ஒரு சிகரம் என்றால் இவர் 
அந்த சிகரத்தின் உயரம்   
 ஐந்து முறை முதல்வராக அமர்ந்த பெருமகன.   
 அரசியல் இவரின் அடையாளம் இவர் 
நாவில் முத்தமிழ் விளையாடும்   
 தொண்ணூற்றுநான்கு அகவை ஆனது 
 தமிழகம் இவரால் புகழை கொண்டது          

மேலும்

கவிஞர் வாலி கவியரசர் கண்ணதாசனின் தாயாக மாறி அவரை தாலாட்டியது.பண் உறங்கும் நாவழகா, பனி உறங்கும்பூவழகா சேர சோழ பாண்டியரு, சேர்ந்து வந்தமூவழகா வீணையில பாட்டேழுப்பும் வாணி எந்தன்பிள்ளையென ஏணையில படுத்திருக்க என்ன தவம்செஞ்சேனோ இப்பிறப்பில் என் வயிற்றில் இப்படி ஓர்மகன் வரத்தான் எப்பிறப்பில் நேந்துகிட்டு எங்கெல்லாம்திரிஞ்சேனொ சாகரத்தில் எடுக்காம சங்கமத்தில்எடுத்த முத்தே மேக மழை கொடுக்காம தேக மழை கொடுத்தமுத்தே நன் முத்தை பழிக்கும்படி பல்முத்து முளைச்சவனே பல் முத்து முளைக்கும் முன்னே சொல் முத்து முளைச்சவனே தன்னாலும் தெரியாம சொன்னாலும் புரியாம அன்றாடம் அந்தியிலே விளக்கு வெச்சா உன்தகப்பன்  சீட்டால தொலச்சுபுட்ட சில்லறையமொத்தமும் உன் பாட்டாலே சம்பாதி நீ பாரதியில்செம்பாதி பஞ்சான கால் மிதிச்சு பனிக்குடம்உடஞ்சதய்ய பூவான கை அணைச்சு பால் குடம்வழிஞ்சதய்ய தாய் பாலே நான் தருவேன் தலைப்பாலேமறைச்சபடி தமிழ்பாலே வள்ளுவன் தான் தருவான் நீவாங்கிக் குடி என் பாட்டு இந்நாளில் உன்ன மட்டும்உறங்க வைக்கும் உன் பாட்டு பின்னாளில் உலகம் மொத்தம்கேரங்க வைக்கும் எழுக்குப் பின்னால எட்டாகப் பிறந்தவனே கூழுக்குப் பாட்டெழுதாம கொழ்கைக்குப்பாட்டெழுது 

மேலும்

மலரும் நினைவுகள் இனி யார் இப்படி கருத்துள்ள அழகிய பாடல்களைப் பாடமுடியும்? பாராட்டுக்கள் நன்றி . 16-Feb-2016 4:20 am

மேலே