அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பில்லா 2 வரும் ஜூன் 22-ம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது. அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள படம் பில்லா 2. பில்லா படத்தின் முதல் பகுதி கதை இது. சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரித்துள்ளது. பில்லா 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது. வரும் ஜூன் 22-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார். ஜூன் 22- அஜீத்தின் திரையுலக போட்டியாளரான விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது!!
வழி : dine கருத்துகள் : 1 பார்வைகள் : 1755
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [69]
- Dr.V.K.Kanniappan [35]
- மலர்91 [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [16]