சாதிகளால் தூசுபடிந்த சமூகத்தை சமத்துவ தூரிகை கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்களே..! சாதி பெயர் சொல்லி உமிழ்ந்தவனை தண்டனைக் கயிறால் பிணைத்து புரட்சியை விதைத்தவர்கள் அவர்களே ...! முப்படையை வீரமுடன் உருவாக்கி முப்பது வருடமாய் கண்ணியமாய் போரை வழிநடத்தியவர் அவர்களே ..........! நள்ளிரவிலும் காமுகர் பயமின்றி மண்ணின் மங்கையர் நடமாட வழிவகை செய்ததும் வீரரவர்களே ...........! பிறந்த மழலையர்க்கு தனித்தமிழில் அழகாய் பெயர் சூடி, அன்னை மொழியை உயிராய் நேசித்த எம்மவர் அவர்களே.... ..! விரோதிகளுடன் கூட்டுச் சேர்ந்து நடந்துவந்த பாதை மறந்த துரோகியரை களையெடுத்து நேராக்கியவர் அவர்களே...! உள் மனதில் துவேசம் கொண்டு பழங்கதை பேசி அரசியல் நடத்தும் உங்களை நம்பி ஏமாந்ததும் அவர்களே ......! தமக்கென பத்திரிகை, வானொலி வைத்து உண்மையை உடனுக்குடன் ஊருக்குரைத்து விடுதலைக்காய் போராடியவர் அவர்களே..! இன்று அவர்கள் இருந்திருந்தால் ஈழத்துடன் ஈழத்தவர் எமக்கென ஒரு `தமிழ்த்` தளமும் வளர்ச்சியின் உச்சமாய் திறந்திருப்பார் ........! `அகதி` என்றவனின் செவிடு பறக்க ஓங்கி ஒரு அறை விட்டிருப்பார்...... எல்லாமிழந்து நிர்க்கதியாய் நிற்கின்றோம்...! அரசியல் சூத்திரவாதியின் வழிகாட்டலில் ஏவி விட்ட செல்லப்பிராணிகள் இரக்கமின்றி எமை குதறிக்கொண்டிருக்க, விடியலைத் தொலைத்துவிட்டு அவர்களை எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.! ஓ..ஆண்டவனே...எனக்கொரு சக்தி கிடைத்தால் மாண்ட சரித்திர நாயகர் அவர்களை மீண்டும் உயிராக்கி மண்ணாவேன் நான் ........!!!!


வழி : Neppolian கருத்துகள் : 0 பார்வைகள் : 72
2
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே