Abi Ruban- கருத்துகள்

அமிலக் குடுவை மனம்
புகைக்க மறந்த வத்தி
திமிர் மறந்த நாட்களில்
தினமும் ஒரு பாடம்
சகதியில் நீராய்
கெட்டுவிட்ட புத்தி
சமத்துவம் பேசும் போது
விழித்துக்கொள்ளும் அறிவு
சந்தர்ப்பம் பார்த்து
இல்லை என்று போகிறது
முடங்கிப் போய்
மூலையில் பதுங்கும் பயம்
கண்டிப்பாய் காற்று
நம்மை நோக்கி வீசுவதில்லை
கண் பார்வையும்
பல சமயம் அப்படித்தான்
கடல் வாங்கும்
மேல் மூச்சும் கீழ் மூச்சும்
அலையாய் எனக்கு தெரியும்
பிம்பங்கள் பொய்
என்றது கண்ணாடி
மனசாட்சி உண்மையா
என்றது மனம்
மனம் ஒரு குரங்கு
என்றேன் நான் !!

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

உங்களின் கருத்துகளே மேலும் எழுத உற்சாகபடுத்துகின்ட்டன

மிக அருமை நண்பரே


Abi Ruban கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே