தரு தமிழச்சி- கருத்துகள்
தரு தமிழச்சி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [51]
- Dr.V.K.Kanniappan [19]
- மலர்91 [18]
- C. SHANTHI [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
நண்பா தங்கள் விடை கிடைத்தது. நன்றி. முடிந்தால் விடை தெரிந்த வினாவை எழுப்புகிறேன்.
Paraspara nambikkai
நட்பு
நான் போகும் இடமெல்லாம் பின்னே வந்தான்
செய்தனவெல்லாம் நன்று என்றான்
தவறென்பதை தட்டி கேட்டான்
மகிழும் அவனும் சிரித்தான்
நான் அழும் போது கண்ணீரை துடைத்தான்
நட்பு அல்லாத உறவேது இருவர்க்கும்
மாறாத நினைவுகள் கொண்ட என் சிறுவயது காதல்
மாறும் வயதில் என் காதலும் மாறுமா
என் அகம் தொட்ட கள்வன் என்று வருவான்
என நான் காத்திருந்து என் கண்களும் ஏங்குகிறது
வருவானா அவன் என் நினைவை நிஜமாக்குவானா
தண்ணீரில் தத்தளிப்பவரை காப்பாற்ற தோன்றும் அனால் எனக்கு நீச்சல் தெரியாது. அதற்காக எனக்கு மனிதாபிமானமோ கருணையே இல்லை என்பது இல்லை. நான் மற்றவர் மூலமாகவோ உதவி செய்ய முடியும். அதுவும் கருணையின் அடிப்படியில் தோன்றும் மனிதாபிமானத்துடன் கூடிய கடமையாகும்.
ராணுவத்தினர் மற்றும் தீ அணைப்பு படையினர் காப்பாற்ற செல்வது அவர்கள் தனது இதயத்தில் தோன்றிய மனிதாபிமான அடிப்படையிலும் தான் மேற்கொண்டுள்ள பனியின் நிமித்தமாக ஏற்பட்டுள்ள கடமை காரணமாகவும் தான்.
மானம் பெரிதென நினைக்கும் தாழினம் நாம். கனவா மானமா என்ற நிலை வந்தால் நாம் அனைவரும் மானமே என முடிவு எடுப்போம்.
நீங்கள் சொல்வதுபோல் தேர்வரைக்குள் நுழைந்த பின் சோதனை செய்தல் மாணவர்களால் மட்டுமே தடுக்க முடியும். ஒரு பெண்ணுக்கு தனது புலன் உணர்த்திவிடும் தவறான தொடுகையை. நீங்கள் சொல்வதுபோல் தேர்விற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
வராத விருந்தாளி வந்தார் இன்று
காணாத சுகத்தை தந்தார் இன்று
நாளையும் வருவாரோ நம்
மண்ணையும் மனதையும் குளிர்விக்க
மழை வருமோ நாளை
மண்ணையும் மனதையும் குளிர்விக்க
கடினமானதுதான் வாழ்க்கை
ஆனால் முடியாதது என்பது இல்லை
கரடுமுரடானதுதான் வாழ்க்கை
ஆனால் வாழ்வே இனிமையானதுதான்
இன்பமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை
அனுபவித்தாள் வாழ்வே சுகமானதுதான்
தடுப்பு சுவர்கள் பல வந்தாலும்
வாழ்ந்து பார்த்தே தடைகளை தாண்டிடுவோம்
எதிர்ப்பு எதிரில் வந்தாலும்
எதிர்த்து நின்று நீந்திடுவோம்
வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ்வோம்
அது நம்மை வாழ வைக்கும்.
நினைக்கிறேன் தடைகளை தாண்ட
முட்டி மோதுகிறேன் முட்களை களைய
அதிர்ந்து நிற்கிறேன் எதிர்நீச்சல் போடமோ
குறையுமோ எதிர்ப்பு நானும் வாழ்வதற்கு
தடைகளும் நீங்குமோ தாண்டி செல்வதற்கு
விடை தெரியா வினாக்கள்
எழுகின்றன என் மனதிலே
நீங்கள் சொல்வதுபோல் தமிழனுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ இடங்கள் கிடைக்காமல் இருக்க இவ்வழியை உபயோக படுத்துகிறார்களோ என்னவோ தெரியவில்லை. எதுவாக இருப்பினும் என் பிள்ளைகளுக்கு இப்படி தேர்வெழுதி கிடைக்கக்கூடிய இடம் தேவை இல்லை. இதுபோல் பல பெற்றோர்களும் யோசித்தால் இந்தநிலை மாறக்கூடிய நிலை வர வாய்ப்பு உள்ளது அல்லவா?
வணக்கம் நண்பரே, நேற்று நீங்கள் என்னை ஒரு பெற்றோரின் நிலையில் இருந்து யோசிக்க சொன்னிரகள்.நான் அந்தநிலையில் இருந்தால் என் பெண்ணிற்கு இப்படிப்பட்ட தேர்வே தேவை இல்லை என முடிவு எடுப்பேன்.
நண்பரே தாங்கள் தவறாக நினைத்து விட்டிர்கள், கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற நாடு நம் தழ்நாடு. நான் அதிக ஆடையை சொல்லவில்லை ஆடையை மட்டுமே சொன்னேன். போராட்டம் இல்லாமல் வெற்றி என்பது இல்லை. ஏன் ஜல்லிக்கட்டு போராட்டம் அகில இந்திய அளவில் பேசப்பட்டது அல்லவா நம்மை நாமே ஏன் தாழ்த்திக்கொள்ள வேண்டும். முடியாதது என்பது இல்லை.
பிள்ளைகளின் குறை களைய பெற்றவர்கள் வெளியில் இருந்தார்கள் அல்லவா
பெண்களின் உள்ளாடைகள் மேல் கைவைப்பதை ஏன் பார்க்கவேண்டும்
அப்படியேனும் மாணவன் தேர்வை கட்டாயம் ஏழுத வேண்டுமா
அனைத்து மாணவனும் ஒருசேர ஏழுத மாட்டோம் என்று முடிவு எடுத்தால் ஏன் இந்த நிலைமை
வெளி ஆடைகளை கிழிக்கவும் ஆபரணங்களை களையவும் நிலையில் மாணவன் ஏன் இருக்க வேண்டும்
பிற மாநிலங்களில் ஆடைகளுக்கும் அபரணங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் குறைவு
பாதிப்பு ஏற்படும் நிலையில் நாம் இருப்பது நலமா?
துரத்த துரத்த தேடிவரும்
தேட தேட தள்ளிச் செல்லும்
நாட நாட விலகிச் செல்லும்
(அது எது?)
கிடைத்தால் சலிப்பு வரும்
அதிகரித்தல் ஆணவம் வரும்
(அது எது ?)
இருந்தாலும் கவலை
இல்லாவிட்டாலும் கவலை
(யார் அவன்?)
அளவோடு இருந்தால்
மகிழ்வோடு வாழ்வோம்
பணம் அளவோடு இருந்தால்
மகிழ்வோடு வாழ்வோம்
அழகு
கொடிக்கு மலர் அழகு
வானில் நிலவு அழகு
நிலவில் பௌர்ணமி அழகு
பௌர்ணமி வானில் விண்மீன் அழகு
விண்ணில் ஒளிரும் மீனின் ஒளி அழகு
அதில் ஒளிரும் நீ அழகு
நீ ஆகிய நானும் அழகே
கண்களும் வேர்க்குமோ
காணாத பொருள் கை சேரும் போது
நெஞ்சமும் இனிக்குமோ
இன்சொல் கேட்கும் பொது
உலகினில் வேறில்லை
நாம் கேட்பவை கிடைக்கும்போது
கண்களும் வேர்க்குமோ
மனம் மகிழும் போது