கன்னி தங்கமுருகன்- கருத்துகள்
கன்னி தங்கமுருகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [52]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [18]
- கவிஞர் கவிதை ரசிகன் [10]
- Ramasubramanian [9]
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அப்பபடி வாழ வேண்டுமெனில் அணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை. அதுவே நாம் மானிடராக பிறந்தமைக்கான நற்செயல். உண்மையில் ஒரு ஆணால் தனித்து வாழ்வதென்பதே முடியாத செயல்தான். இதில் பெண் தனியாக வாழ்வதென்பது நடைமுறையில் சாத்தியமில்லாத¸ எதற்கும் பயனில்லா தனி மரமாய் ஏன் வாழ்ந்து மடியவேண்டும்?
தாயின் அன்பு மட்டுமல்ல தந்தையின் மனதையும் பெரும்பாலானவர்கள் உணர்வதேயில்லை. இருக்கும்போது அறியாதவர்கள் அவர்கள் மறைந்தபிறகு அவர்களுக்காக உருகுவது ஏன் என்றுதான் புரியாத வேடிக்கையாக உள்ளது. கடவுளைவிட சிறந்த கண்களுக்குத் தெரிந்த நம் கடவுளான பெற்றோரை இருக்கும்போது போற்றி மகிழ்வோம்.
நமக்கு "பிடித்த பெண்ணை" நிச்சயித்து கல்யாணம் செய்துகொள்வதே நன்று
காமம் குதிரையின் கடிவாளம் போன்றது. அதை தட்டவேண்டிய நேரத்தில் மட்டும் இழுத்துப்பிடித்து ஓட விரட்டி (தட்டி எழுப்பி நம்ப பாஷையில்) சேர வேண்டிய இடத்துக்கு குதிரையை செலுத்துவதே சரி.
நல்லவன் சார் நான் சொன்னது செமயா? சுமயா? ஒரே வரியில் கூட சொல்லாமல் ஒரே வார்த்தையில் ஜொள்ளிடீங்களே இது நியயமா?
ஜாதிகள் ஒழிய ஐந்தென்ன ஐம்பதாயிரம் வழிகள் சொன்னாலும் அது முடியாது. ஏனெனில் எந்த ஜாதிக்காரனும் ஜாதிகள் ஒழியவோ அழியவோ விரும்பமாட்டான். ஜாதியின் அடிப்படையில் இங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் உருவாக்கப்பட்டது மட்டுமின்றி இந்த ஜாதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சலுகைகளை எவனும் எனக்கு வேண்டாம் என எப்படி சொல்வான்? ஏட்டளவில் வேண்டுமானால் புதுமைப்படைக்க பலவாறு பேசப்படலாம்.
அந்த புதுமையிலும் பல சிக்கல்களை சில குடும்பங்கள் அனுபவித்துக்கொண்டுதான் உள்ளது. ஒரு புறம் காதல் என்ற போர்வையில் மாட்டி காதலுக்காக சேர்ந்து பிறகு எந்த ஜாதியில் குழந்தைக்கு சான்று வாங்குவது என சண்டைப்போட்டு பிரிந்தவர்களும் உண்டு. காதலுக்கு ஜாதி அவசிமில்லை. ஆனால் குழந்தைக்கு மீண்டும் ஜாதிச் சான்றும் தேவை அந்த குழந்தை மீண்டும் எந்த ஜாதியில் உள்ளவரை மணப்பது என்ற கவலை பெற்றவருக்கு மட்டுமின்றி சம்பந்தப்பட்ட குழந்தைக்கும் உண்டாகிறது. இந்த ஜாதி என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்?
அப்படியானால் இந்த காதல் கல்யாணமும் வீண்தானே?
சரி ஜாதிகள் ஒழிய காதல் கல்யாணம் வேண்டாம் நாமே எல்லோரும் ஒத்துக்கொண்டு எல்லா ஜாதியிலும் பெண் எடுப்பது பெண் கொடுப்பது என்று செய்யலாமா? இதற்கும் எந்த ஜாதிக்காரன் முதலில் சம்மதிக்க வருவான் ப10னைக்கு யார் மணிக்கட்டுவது என்ற நிலைதான்.
ஆக நாம திருந்தலாம்னு ஆசைப்பட்டாலும் முடியாது என்ற நிலைதான். அப்படியானால் இந்த அரசாங்கமே ஜாதிச் சான்றே இனி வேண்டாம் என்றால் எப்படி இருக்கும்? ஜாதிகள் ஒழிந்துவிடுமா? புpரச்சனைதாங்க இன்னும் அதிகமாகும் உயர்ந்த ஜாதிக்காரன் மட்டும் அரசு வேலைக்குப் போய் சம்பாதிக்கிறான். தாழ்ந்த ஜாதிக்காரனின் சலுகைகளையும் பிடிங்கிட்டாங்க என்பார்களே?
எனவேதான் சொல்கிறேன் இதை ஒழிக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. அப்படிச் சொல்வதெல்லாம் பம்மாத்து வேலை. செயலில் காட்ட இயலாது. இது ஒரு தொடர்கதை. தினம் தினம் வளர்பிறை .
அருமையான பதில் நன்றி
என் கண்களுக்கு மட்டும்தான் சாக்கடை தேங்கி அசுத்தமாகி இருப்பது தெரிந்ததா? வேறு எங்குமே இப்படி இல்லையோ? ஆச்சரியமாக இருக்கிறது. தூய்மை இந்தியாவால் எங்கள் ஊர் தவிர அனைத்தும் தூய்மையாகிவிட்டாதா? அல்லது இது அவசியமில்லை என அலட்சியமாக அனைவரும் இருக்கிறார்களா? புரியவில்லை. ஆச்சரியமாக உள்ளதே. அனைவரும் கருத்து ஏதும் சொல்லாமல் இருப்பது.
பாடம் கற்காமல் பரீட்சையில் வெற்றிபெற முடியுமா? தோல்வியடையா வெற்றி ஏது? நம் தோல்விகளே முன்னேற்றத்தின் சரிசெய்ய உதவும் படிகட்டுகள்.
மாற்றம் மட்டுமே நிரந்தரமானது என்பதையும் நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஏனெனில் எல்லா விசயங்களுக்கும் காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறும் மாறியேதான் ஆக வேண்டும். இதுதானே நியதி.ஆக அதுவும் நிரந்தரமானது நடந்துகொண்டே இருப்பதுதான்.
நிரந்தரமானது தாயின் அன்பு எனச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் மிகத தெளிவாக அனைவரும் ஏற்கும்படி இருந்தது. மகிழ்ச்சி. நன்றி.
பிறர் மனதை புண்படுத்தாதவாறு எவருக்கும் துரோகம் செய்யா நல்மனதுடன் வாழக்கற்றுக்கொள்வதே சிறந்தது என நான் கருதுகிறேன்.
காமம் இல்லாவிட்டால் காதல் காணாமல் போய்விடும். ஆனால் காமம் மட்டுமே வாழ்க்கையல்ல. அதேசமயம் காமம் இல்லாவிட்டால் அது வாழ்க்கையே அல்ல. அதற்காக காமமே வாழ்க்யையாகிவிடாது. நண்பர் கவின் சாரலன் சொன்னது போல காமத்தை எங்கே எப்போது எவ்வாறு வெளிப்படுத்துவது கேட்பது என இடம் பொருள் ஏவல் முக்கியம் என்பதே என் நிலைபாடு.
போனால் திரும்பி வராத இளமையைப் பற்றி யோசிப்பது வீண் வேலை. ஆனால் இப்போதைய நிலையை சரியான முறையில் பயன்படுத்த யோசிக்கலாம்.
நல்லவன் சார் நல்லமுறையில் விளக்கம் தந்தது மட்டுமின்றி கவின் சாரலனின் பதிலுக்கு எம் சார்பாக நச்சென சொல்லி உதவியமைக்கு நன்றி.
விளி வழி வந்ததெல்லாம் சரி தமிழில் அதுபோல சொல்ல ஏதாவது உண்டா?
அருமையான விளக்கம்..........!
மச்சி மச்சினன் என்பது இருக்கட்டும் டீ சாப்பிடலாம் என்பதற்கு என்ன?
காமம் என்ற ஒன்று இல்லாது போனால் நாம் எதையுமே விருப்பப்பட மாட்டோம். இன்னும் சொல்லப்போனால் காமம் என்ற ஆசையேதான் நம் எல்லா செயலுக்கும் காரணம். அது ஒவ்வொரு இடத்திலும் வேறுபாடாய் இருக்கிறது. ஆனால் எதை எப்போது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நியதி ஒன்று உள்ளதே. பிஞ்சி பழுக்ககூடாது அதற்கு நாம் துணைபோக வேண்டாம் என்பதே என் நிலை. ஏனெனில் கவிதை கட்டுரை ஓவியம் என அனைத்தும் இருக்கும் இந்த பகுதியை எல்லா வயதினரும் ஆண் பெண் என படிப்பவர்களை சங்கடப்படுத்தும் விதமான செக்ஸ் தேவையா? அதற்கென்றே இருக்கும் சேவைகளில் இதை கேட்பதே நன்று என நான் எண்ணுகிறேன். அவ்வளவே. அதற்குமேல் தங்கள் விருப்பம்.¸ நடுவர் குழுவின் பரிந்துரை நான் என்ன செய்யமுடியும்?
அரசின் மதுபானக்கடைகள் கட்டாயம் மூடப்படவேண்டும். இதில் எவ்விதமான மாற்றுக்கருத்துகளும் எமக்குக் கிடையாது. வெறும் வருமானத்திற்காகத்தான் எனில் அதைவிட சிறந்த வருமானமாக விபச்சாரத்தைக்கூட முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மக்கள் உடல் நலனுக்காக என்கிறார்கள் எப்படியெனில் அதிக விலைக்கொடுத்து தனியார் மதுபானங்களை குடித்தால் நாட்டிற்கும் நஷ்டம் வீட்டிற்கும் நஷ்டம் உடல் நலத்திற்கும் கேடாம் இது எப்படி இருக்கு?
சரி இந்த மதுபானக்கடைகளை மூடிவிட்டால் என்ன நடக்கும்? இந்த குடிகாரர்கள் அனைவரும் திருந்திவிடுவார்களா? அதுதான் நடக்குமா? எறும்பு வெல்லத்தை தேடி அலைந்து கண்டுபிடிப்பதுபோல இந்த குடிகாரர்களும் அண்டை மாநிலத்தை தேடிப்போய் குடிப்பார்கள் வாங்கிவந்து விற்பார்கள். கள்ளச்சாரயம் காய்ச்சுவார்கள்……………..அதைத்தடுக்க சிறப்பு போலிஸ் வரும் வந்து வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு போவார்கள். அப்படியானால் மதுக்கடைகள் இப்படியே இருக்கலாமா? என்னதான் செய்யலாம்?
ஓட்டுமொத்த இந்தியா முழுவதும் அனைத்து மதுக்கடைகள் மூடப்படவேண்டும். தனியார் மதுகம்பனிகள் அனைத்தும் மூடப்படவேண்டும? ஏற்றுமதி¸இறக்குமதி எதிலும் மது சம்பந்தப்பட்ட எந்த விசயமும் iகிவிடப்படல் வேண்டும். அதே போன்று இராணுவத்தில் கொடுக்கப்படும் மதுவும் நிறுத்தபடல் வேண்டும்(இது நடக்குமா?)
மேலும் தடைசெய்யப்பட்ட பான்பராக் பான்மசாலா அனைத்தும் உற்பத்தியுடன் நிறுத்தப்படவேண்டும். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது விற்பது போன்றவற்றை பிடித்துக்கொடுக்கும் அதிகாரம் மக்களுக்கும் உண்டு என்ற அரசின் உத்தரவு வேண்டும். மாநில காவல்துறையை கண்கானிக்க மத்திய சிறப்பு படையில் ஒரு புதிய அதிகாரக்குழு நியமிக்கபடவேண்டும்¸
இவையெல்லாம் தயார்படுத்தப்பட்ட பிறகு கண்டிப்பாக மதுக்கடைகள் மூடப்பட்டால் மட்டுமே நாட்டில் முழுவதும் மதுவென்ற அரக்கனை அழிக்க முடியும். இல்லையேல் நாட்டுவருமானம் நாட்டுக்கும் கிடைக்காமல் வீட்டுக்கும் கிடைக்காமல் கள்ளச்சாராய கும்பலுக்கும் அதற்கு துணைநிற்கும் அரசியல் பிழைப்பாளிகளுக்கும் அதை வேடிக்கைப்பார்க்க காத்திருக்கும் துறைக்கும்தானே போகும்? மதுவும் இருக்கும் குடிகாரர்களும் குடித்துச் சாவார்கள். வீட்டைக் கெடுத்து நாட்டை அழிப்பார்கள்.
சிந்திப்போம்……………………. செயல்படுவோம்……………. ஓற்றுமையுடன் குரல் கொடுப்போம் மதுவெனும் அரக்கனை விரட்டியடிக்க ஆக்கப்பூர்வமாய சிந்தித்து செயலாக்க.