naththi- கருத்துகள்
naththi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [14]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
- Ramasubramanian [12]
நன்றி :-)
நன்றி .. :)
நன்றி.. :)
அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்... ஆணின் மனதில் இருந்து இதற்கு விடை இதோ ....
++++++++++++++++++++++++++++++
காளைநான் உனை காண - அதி
காலையிலே கண்விழித்து
கண்ணாடி முன்னின்று - நனி
மிடுக்கு பலசெய்தேன்
சுற்றம் பலகூடி - ரதி
உன்னை கண்பார்த்தேன்
பார்த்தவிழி பற்றியது - பனி
பூ உன்னை சுற்றியது
பார்த்தநொடி இரண்டாயினும் - நீ
வீசிய பார்வையோ
தாங்கும் ஏழுஜென்மங்கள் - என்
எண்ணமெங்கும் உன்விம்பங்கள்
கதவிடிக்கின் ஓரத்தில் - நீ
நின்று எனைரசிக்க
உதட்டோரம் புன்னகையுடன் - என்
கண்கள் உனைதேட
நாணத்தில் உன்பாத - பெரு
விரலும் கோலமிட
கோணமாக நான்பார்த்து - மெய்
மறந்தேன் உன்னெழிலில்
மின்னுமுன் பொன்னழகு - கரு
விழியோ பேரழகு
மின்னலிடை கொடியழகுசெவ் - வாய்
இதழோ கள்ளழகு
தேவி உன்கரம்பற்றி - கொண்டு
செல்ல துடிக்குதடி
ஓவியமாய் உனைத்தாங்கி - மனம்
வாழ ஏங்குதடி
காத்திருக்கின்றேன் நற்தருணத்திற்கு - ஆண்டு
பலவானாலும் ஆவணி பலபோனாலும்
வருவேன்தாலி கையோடு அத் - தினம்
முதல் பகிர்வேன் காதல் உன்னோடு
நன்றி... :-)