sainath- கருத்துகள்

இதில் காதலே வரலையே??? அப்போ காதலிப்பவன் மனிதனாக வாழ முடியாதா????

குமுதம் அளித்தது சூப்பர் ஸ்டார் பட்டம் அல்ல. அடுத்த சூப்ப்பர் ஸ்டார் பட்டம். சினிமா வை சினிமாவாக பாருங்கள் என்கிறீர்கள். அந்த சினிமா வசனம் தான் பல பேர் வாழ்க்கை இல் பாசிடிவ் எனெர்ஜி தந்துள்ளது. நடிகர்கள் வெறும் நடிகர்கள் மட்டும் அல்ல. அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களால், சிலருக்கு ரோல் மாடெல் ஆகவும் இருகிறார்கள். ஒரு திருமணத்தில் இலையில் வைக்கும் அனைத்தையும் நாம் உண்பதில்லை. பிடித்ததை எடுத்து விட்டு, பிடிக்காததை ஒதுக்குகிறோம். சினிமா காரர்களிடமும் பிடித்ததை நான் எடுக்கிறேன். (நல்ல விசயங்களை) பிடிக்காததை ஒத்துக்குறேன். //என்று தணியும் இந்த சினிமா மோகம்// உங்கள் வாழ்க்கை இன் பல நிகழ்வுகளில் கூட நீங்கள் சினிமாவை உதாரணமாக எடுத்து இருந்திருக்கலாம். அம்மா சொன்னால் கேட்காதவன், சூப்பர் ஸ்டார் சொன்னால் கேட்பான் என்றால், அது தான் சினிமாகாரர்களின் பவர். எந்த ஒரு நடிகர்களும் பாலபிசேகம் கேட்கவில்லை. எந்த ஒரு நடிகரும், ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்துவது இல்லை.

தமிழ் எப்படி அழியும்? தேவை இல்லாத பயம்? தமிழ் என்றும் குழந்தை. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் போகும். வெளி நாட்டில் அதிகமாக வாழ்பவர்கள் உலகவில் நம் இந்தியர்கள் தான். அதிலும் நம் தமிழர்கள் தான் அதிகம் என்று ஒரு கருது கணிப்பு சொல்கிறது. அப்படி இருக்க உலகம் முழுவதும், தமிழ் பரவி கொண்டுதான் இருக்கிறது. சில கெட்ட அரசியல்வாதிகளும், பேச்சாளர்களும் தங்களை பயம் பொருத்தி வைத்திருகிறார்கள் என்று தான் நினைக்கிறன்.

வெளி நாடு மொழியை கற்றால் போதாதா என்கிறீர்கள். ஏன் நம் நாட்டின் பிற மாநிலத்தின் மொழியை கற்க கூடாதா? தமிழ் நாட்டிலே பிறந்து தமிழ் நாட்டிலே மடிவேன் என்பவர்களுக்கு கூட தமிழும் ஆங்கிலமும் அவசியம். முதலில் நாம் இந்தியர்கள். பிறகு தான் தமிழர்கள். ஹிந்தி அவசியம் தோழரே.

தமிழுக்காக, உயர் விட்டவர்களை நான் மதிக்கிறேன். வணங்குகிறேன். தமிழ் வாழும் தோழரே! இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், கல் தோன்றா, மண் தோன்றா, காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழியான, நம் தமிழ் மொழியை இயற்கையால் கூட அழிக்க முடியாது. அதே நேரம், தமிழுடன் சேர்ந்து மற்ற மொழி கற்பதனால், தமிழை யாரும் மறந்து விட மாட்டார்கள். பிற மாநிலத்தினர், அவர் தாய் மொழியில் தங்களுடன் பேசும் பொழுதும், ஹிந்தி தெரியாதா என்று ஏளனமாக, நம் தமிழர்களை பார்த்து கேட்கும் கேள்விக்கு, விடை தெரியாமல் முழிக்கும் அனுபவம், வடஇந்தியாவில் பிழைப்பிற்காக போய் போராடும் நம் சகோதரர்களுக்கு மட்டுமே தெரியும்.. நானும் கர்நாடக மாநிலத்தில் தான் 3 ஆண்டுகளாக இருக்கிறேன்.

இங்கு தமிழ் யாருக்கு தெரியாமல் இருக்கிறது? 'ல' வையும், 'ழ்' வையும் சரியாக உச்சரித்தால் மட்டும் தான் தமிழ் தெரியும் என்று அர்த்தமா?

தெளிவாக, அணைத்து தரப்பினர்க்கும் புரியும்படி விளக்கினீர்கள்.

பேசத் தொடங்கும் முன்னரே
முடிந்து விடுகின்றன
உரையாடல்கள்
நம் விழிகளின் வழியே!

என்னை நானே மறந்த வினாடியை, இந்த வரிகள் நினைவூட்டுகிறது கார்த்திகா! Excellent.. Go ahead.. Congrats!!

கருத்துக்கு நன்றி!

நன்றி கார்த்திகா!

உண்மையான உணர்வு.. இரவு நேரத்தில் படிப்பதால் என்னவோ, அழுகையை முழுங்கிகொள்கிறேன்! உங்களின் படைப்புக்கும், உணர்வுக்கும் தலை வணங்குகிறேன்!

நல்ல கேள்வி.. பதில் அளிக்கும் முன் ஒரு வாரம் முயற்சி செய்து விட்டு வருகிறேன்.

நன்று! புகை நண்பனானாலும், மது அன்பனானாலும், காதலி என்றும் அவளே! அருமையான காதல் உணர்வு தோழரே! வாழ்த்துக்கள்!

நிச்சியம் தவறு. அவர்கள் வெறும் சினிமாகாரர்கள் மட்டும் அல்ல. பலருக்கு Role Model ம் கூட.

பயம் வேண்டாம். தமிழை நீக்க முடியாது!

கவலை வேண்டாம் தோழரே! இனி தமிழை யாரும் அழிக்க முடியாது!


sainath கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே