சூப்பர்ஸ்டார் பட்டமும் குமுதத்தின் ஆசையும்

...................................சூப்பர்ஸ்டார் பட்டமும் குமுதத்தின் ஆசையும்..........................



வணக்கம் .

நான் இங்கு பதியும் கருத்துகள் என் தனிப்பட்ட கருத்துகள் இந்த ஜனநாயக நாட்டில் இருக்கும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் என்னக்கும் அவ் உரிமை உள்ளது என்ற எண்ணத்தில் பதிகிறேன் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுத்தப்பட்டவை அல்ல..

((பி.கு: இங்கு இதை எழுதுவதால் நான் எந்த தனிப்பட்ட நடிகரின் ரசிகனும் அல்ல. அறியா வயதில் நானும் ரசிகனாய் இருந்துள்ளேன். ஆனால் நான் படித்த ஊடகத்துறை சார்ந்த படிப்பு எனக்கு ஒரு நடிகனை ரசிக்க கூடாது ஒரு நல்ல கலைஞனைதான் ரசிக்க வேண்டும் என்று என்னக்கு கற்று தந்ததுள்ளது.))



சூப்பர்ஸ்டார் பட்டம் : -
-----------------------------------


1978 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் பட்டம் ரஜினிக்கு தானுவால் பைரவி விளம்பர பானர்களில் முதன்முதலில் புகழ்ச்சிக்காக போடப்பட்ட புகழ்ச்சி வார்த்தை மட்டும்தான்.

ஆனால் பின் எப்படி இன்று கவர்ச்சிகரமான வார்த்தையாக அது மாறியது?

என்ற கேள்விக்கு அது ரஜினிகாந்த் என்ற தனி மனிதனின் கடும் உழைப்பாலேயே நிகழ்ந்தது என்று மறைக்காமல் சொல்லலாம்.

அவர் எப்போதும் பிறரின் பட்டங்களிலோ இல்லை தனக்கென பிற பட்டங்களை வைத்துகொள்ள என்றும் ஆசைப்பட்டது இல்லை..
இன்றைய தமிழ் சினிமா நடிகர்கள் வரும்போதே பட்டங்களுடன் தான் வருகின்றனர்..


குமுதத்தின் ஆசை :-
----------------------------------

குமுதத்திடம் சில கேள்விகள்..

ஒருவர் ஒரு துறையில் நிலைத்திருக்கும் காலத்தில் அவரின் பெயரின் பின்னல் உள்ள பட்டதை பிறருக்கு அவரை தவிர வேறு ஒருவரால் வழங்க இயலுமா..?

இது மக்களால் கொடுக்கப்பட்டது என்று கூறலாம்..

எனில் இப்பொது அவர் அப்பட்டதிர்க்கு உரியவர் அல்ல அல்லவா..?

மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பு அவரின் அனுமதியுடன் நடைப்பெற்றதா....?

எனில் முடிவு அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை அவரிடம் வழங்கி இருக்கலாம் அப்படி நடந்திருந்தால் அவரின் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் அல்லவா..?

இன்று ஒரு நடிகருக்கு உங்களின் கருத்துகணிப்பு முலம் கொடுக்கப்பட்ட அவ் பட்டதை நாளை வேறொரு கணிப்பு மூலம் வேறொரு நடிகருக்கு கொடுப்பிர்களா..?

எனில் அப்பட்டதின் உரிமை மறைமுகமாக உங்களின் கையில் எடுத்துகொள்ள முயல்கிறீர்களா...?

எதிர்காலத்தில் இவ்வாறு பல பட்டங்களை அளிக்கும் உரிமை எங்களின் கருத்துகணிப்பு மூலம்தான் நடைபெறும் என்று மறைமுக சினிமாத்துறையை எச்சரிக்கிறீர்களா...?

இவ்வாறு ஒரு பட்டம் அளிக்கும் முறைமூலம் உங்களின் வியாபாரம் மற்றும் பட்டங்களை அளிக்கும் உரிமை போன்றவற்றை மறைமுக மக்களின் கண்களுக்கு தெரியாமல் நடைமுறை படுத்துவது மட்டும் தெளிவாகிறது.

------------------------------------------------------------------------------------------------
இது தெரியாமல் ரசிகர்கள் இணையத்திலும் நேரடியாகவும் ஒருவரையொருவர் தாக்கி பேசுகின்றனர்....

ஊடகங்களின் உண்மை நிலையை இங்கு அறிந்தவர் யார்..?
சினிமாக்களை என்றும் சினிமாவாக மட்டும் பார்..
குழப்பிவிட இங்கு பல கூட்டமுள்ளது - நீ
அசந்துவிட்டால் உன் வாழ்க்கைக்கு வேட்டும் உள்ளது..

நண்பா மறைமுக நாடகங்களுக்கு என்றும் பலியாடுகள் ஆகாதே..!.....

----------------------------------------------------------------------------------------நன்றி

எழுதியவர் : ச.ஷர்மா (18-Oct-14, 3:25 pm)
பார்வை : 185

மேலே