சூர்யா பிரகாஷ் - கருத்துகள்

நன்றி தோழரே. என் வாக்கும் கண்ணதாசன் அவர்களுக்கே.

தங்கள் பதில்குறிப்புக்கு நன்றி.

காமம். அருமையான தமிழ் சொல். காமம் இல்லாமல் மனித இனத்தின் வளர்ச்சி ஏது?. அது எளுதுவோரின் நுணுக்கத்திலும் படிப்போரின் பார்வையிலும் உள்ளது. தயவு செய்து அந்த வார்த்தை தகாத வார்தையாய் மாறாமல் பார்த்து கொள்ளுங்கள்.

புதிய தலைமுறைக்கு இனிய வழி..நல்ல யோசனை...

புரிந்தது...அவரவர் பக்குவமே என்பது...எப்போது இவர்கள் இதை புரிந்து கொள்வார்களோ....ஜாதி மத அடிப்படையில் கட்சிகள் வேறு ....நன்றி அய்யா...

நன்றி. உங்கள் பதில் ஒரு வித விளக்கம் அளித்தது. ஒரே மாதமும் ஜாதியும் சாத்தியமில்லைதான். ஆனால், இருக்கும் மதத்தையும் ஜாதியையும் வைத்து சண்டை கொள்வதை பற்றி நான் கூறவந்தேன்..கேள்விக்கு ஏற்ற பதிலாக இது எனக்கு ஒரு தெளிவு அளிக்கவில்லை அய்யா....

தெரியாத மொழியில் பிறர் பேசுவது(eg.chinese,thai language, etc.,)....கோபம் வேணாம்....இது சிரிப்புக்காக சொல்லவில்லை....பொதுவாக சொல்லப்படுவது பெண்களின் மவுனமும் கண்களும்.....இன்னும் பல நிலையில் பல கேள்விகள்...

சரிதான்... மனித பிறவிக்கு மனதண்டனை இந்த பந்த பாசம் எல்லாம்.....ஒரு சிசு பிறக்கும் பொது வந்து உரசும் முதல் காற்றப்பவே இந்த பந்த பாசம் வந்து ஒட்டிக்கொள்ளும்.....பாசமா பழகியவுங்க விட்டு போகும் போது...நமக்கு ஒரு எண்ணம் வரும் 'ஒருவேல தப்பு நம்ம மேலயா' ன்னு அதுதான் ஒரு மனிதனுக்கு மிக பெரிய குளப்பமும் தண்டனையும்.....இது தாயோ தந்தையோ நண்பனோ காதலியோ மனைவியோ ரத்த பந்தமோ etc.,etc., ...யாரல யாருக்கு இந்த பிரிவு ஏற்பட்டாலும்..ஆனா குரங்கு மனம் மீண்டும் அந்த விட்டு போன பாசத்துக்கு ஏங்கும்....

இத கண்டிப்பா ஒரு இஞ்சீனியர் பையன் தான்ப்பா எழுதி இருக்கணும்....நன்று

கடுகு சிறுத்தாலும்........இந்த பலமொழி சரியாக இருக்கும் இந்த படைப்பிற்கு....நன்று

காதலை அனுபவிக்காதவர் இங்கு இல்லை..பார்வை உள்ளோருக்கு இனக்கவர்ச்சியும் ஒரு அங்கம் காதலில்...நிஜ வாழ்க்கையில் அது ஒரு தூய பந்தமாக உள்ளதால் அவை கவிதைக்கும் கதைக்கும் ஒரு ரசனையை உருவாக்கியது...நம் வாழ்க்கையில் நடந்த ஒரு காதல் சம்பவம் அந்த கதையிலோ கவிதையிலோ ஒரு ஓரத்தில் நின்றதால் அது அதீத உணர்வுடைய ஒன்றாக மறுப்பு இல்லாமல் மனதில் நின்றது...நட்பை போல காதல் நம்மை அறியாமல் நமக்கு ஏற்படும் ஓர் அழகிய உறவு....

உங்கள் பதிலுக்கு நன்றி. இங்கே சொல்லும் ஒவ்வொரு வார்தையும் இப்படியே நின்று விடாமல் பார்த்து கொண்டால் நல்லது.

ஆம், திறமையை மூடி மறைத்து படிக்கும் அறிவு அழிவே.

உங்களது பதில்குறிப்புக்கு நன்றி சகா. நானும் ஒரு இன்ஜினியரிங் மாணவன் தான்.

வாரி - வருவாய்; விளைவு; தானியம்; செல்வம்; மூட்டைகளைக்கட்டவுதவும்கழி; கூரையினின்றுவடியும்நீரைக்கொண்டுசெல்லுங்கால்; தோணிப்பலகை; மடை; சீப்பு; குப்பைவாருங்கருவி; தடை; மதிற்சுற்று; செண்டுவெளி; பகுதி; நீர்; வெள்ளம்; கடல்; நீர்நிலை; நூல்; திருமகள்; வீணைவகை; இசைக்குழல்; யானையகப்படுத்தும்இடம்; யானைகட்டுங்கயிறு; யானைக்கோட்டம்; வாயில்; கதவு; வழி; முறையில்என்னும்பொருளில்வரும்சொல்.
இதுவே தமிழ் அகராதியில் நான் கண்ட அர்த்தங்கள் சகா.
இதில் எது எங்கு பயன்படுத்தப்படும் என்பது நம் கையில் உள்ளது.
நான் அறிந்தவரையில் ஒரு சொல்லுக்கு இவ்வளவு அர்த்தம் உள்ளது நம் செந்தமிழில்தான்.

எனது கேள்வியின் உள் அர்த்தத்தை புரிந்து பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா.

உங்கள் பதிலுக்கு எனது நன்றிகள். என் கேள்வியின் அறியாமையை ஏற்றுக்கொள்ளவும். கமல் பிரபுதேவா எ.கா நன்றாக இருந்தது. ஆனால் நான் அதே கலை துறையில் இருக்கும் இன்னும் சில நடிகர்களை மனதில் கொண்டு கேட்டேன்.

உங்கள் கருத்துக்கு என் நன்றி. ஆனால், ஆண்கள் பரதம் கற்பதால் பெண்களின் நளினம் பெற்றது போல் தோன்றுகிறது .இதற்கு உங்களது கருத்து?


சூர்யா பிரகாஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே