சேர்த்தவர் : Rosichandra5f2e81d21fa4f, 18-Dec-20, 9:58 pm

கவிதைகளில் கலைச்சொற்கள்

போட்டி விவரங்கள்

*இனிய அறிவிப்பு*

*தேடல் களம் அறக்கட்டளை*

சார்பில்,
ஒவ்வொரு திங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிற தொடர் நிகழ்வான,

*கவிதைகளில் கலைச்சொற்கள்*

எனும் பொருண்மையில், சங்க இலக்கியக் கலைச்சொற்களைக் களமாடவைக்கும்,

*காணொளி கவியரங்கம்*

வருகிற *27.12.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி* அளவில் நடைபெற உள்ளது.

எங்குமே நடைபெறாத புதிய முயற்சியை, நமது தேடல்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது, தாங்கள் அறிந்ததே.

அவ்வகையிலான இத்தொடர் நிகழ்வில், கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 - இலக்கியக் கலைச்சொற்களை
24-வரிகளுக்குள் பயன்படுத்தி, சுவையான கவிதையைப் படைத்திடப் பாவாணர்களை அன்போடு அழைக்கிறோம்.

*கவிதைக்கான தலைப்பை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.*

நமது அரிய தொடர் இலக்கியப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள, கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கி, தங்களின் பெயரினைப் பதிவிட்டு, பங்கேற்பினை உறுதி செய்து கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

*பதிவு செய்துகொள்ள சொடுக்க வேண்டிய இணைப்பு*

https://forms.gle/fGmPeFEn46sUNfgJ8

அறிவார்ந்த பாவாணர்களின் பாக்களிலே, கொஞ்சி விளையாட வேண்டியக் கலைச் சொற்கள், அதனதன் பொருள்களோடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. *சங்கை -* எண்ணம்; வழக்கம்; வறட்சுண்டி; சுக்கு; எண்; அளவு; ஐயம்; அச்சம்; பகை;
2. *சழக்கு -* குற்றம்; தீமை; பயனின்மை; தளர்ச்சி; பொய்,
3. *முதிதை -* மகிழ்ச்சி; மனத்தூய்மை; தியானம்,
4. *ஆதுலன் -* நோயாளி,
5. *மண்டு -* நிறை அறிவு;
6. *கும்பி -* வயிறு
7. *புள்ளுவம் -* வஞ்சகம்
8. *காலதர் -* சாளரம்; சன்னல்,
9. *அவம் -* கேடு; தீமை,
10. *இகல் -* மாறுபாடு,
11. *சேக்கை -* படுக்கை,
12. *ஒல்லை -* விரைவு; வேகம்.

மேற்கண்டக் கலைச் சொற்களைக் கவிதைக்குள் செதுக்கி,
*வருகிற 26.12.2020-க்குள், அனுப்ப வேண்டிய புலன எண் 8695006900
*முயன்றால் விண்ணைத் தொடலாம்.* *வரலாறு நமக்காகக் காத்திருக்கிறது.* *அதன் பக்கங்களில் நம் பெயரைப் பதிப்போம்.* *தமிழ்ப்பற்றோடு நமது பாசத்தை உலகறியச் செய்வோம்.*
*சாதனை அரங்கில் சந்திப்போம்.*

பாசத்துடன்,

*நந்திவரம் பா.சம்பத்குமார்* நிறுவனர் / தலைவர், தேடல்களம் அறக்கட்டளை.
8695006900

பரிசு விவரங்கள்

பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

ஆரம்ப நாள் : 18-Dec-2020
இறுதி நாள் : 26-Dec-2020  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 27-Dec-2020

கவிதைகளில் கலைச்சொற்கள் போட்டி | Competition at Eluthu.com



மேலே