எண்ணங்களோடு ஓர் உரையாடல் மொட்டை மாடி முழு பௌர்ணமி...
எண்ணங்களோடு ஓர் உரையாடல்
மொட்டை மாடி
முழு பௌர்ணமி இரவு
ஆடி காற்றில் அலை மோதும் மனது
சிந்தனையில் ஆயிரம் விஷயங்கள்
சிரிக்கும் உதடுகள்
சிறுதுளி நீரில் கண்கள்
கடந்து போன காதலா?
நடந்து முடிந்த இன்னலா?
விடை தெரியாத விடியலா?
விளங்காமல் விரிந்தன சிந்தனைகள்
நடப்பவைகள் தெரியாதவன்
நடந்தவைகளுக்கு விளக்கம் தேடினேன்
இயன்றதை செய்யாமல்
இழந்ததை நினைத்தேன்
மெத்த படித்த அறிவு
மெதுவாய் சொன்னது
முட்டாள் அல்ல நீ-எல்லாம்
முடிந்தது என்று நினைக்க
கடந்த காலம் மறந்து
நடந்து போ முன்னே
எதிர் வரும் சவாலை சமாளி
முன்னே பெற்ற அனுபவத்தில்
பின்னே பார்
வெற்றி பின்னாலே வரும்
நீ முன்னேறி கொண்டே செல்ல