எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கப் பலவழிகள் உள்ன. அவற்றில்...

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கப் பலவழிகள் உள்ன.

அவற்றில் மூன்று வழிகளைச் சிலர் தேர்ந்தெடுத்து கோடீஸ்வரர் ஆகிவிடுகிறாகள்.
முதல் வழி ச்ந்நியாசி வேஷம். சாதாரண மனிதனுக்கு சட்டப்படி ஒரு மனைவி. ஆனால் சில சந்நியாசிகளுக்கு அவரோடு மணம்புரியாது வாழும் பல மனைவிகள். பணத்தைக் கொட்டிக் கொடுக்கப் பக்தகோடிகள். உலகம் முழுதும் சொத்து உள்ள போலிச் சாமியார்களும் பிரபலமாய் உள்ளனர்.

இரண்டாவது வழி: நீரிழிவு நோயால் சீரழிவோரையும், அழகைப் பராமரிப்பதில் அக்கறை உள்ளவர்களையும் ஏமாற்றிப் பிழைக்க சிலர் அவர்கள் தயாரிக்கும் பொருள்களின் பெயர்களோடு ஹெர்பல் என்ற சொல்லைச் சேர்த்து அதிக விலைக்கு விற்று கொழுத்த இலாபத்தைப் பெறுபவர்களும் இருக்கிறார்கள்.

மூன்றாவது வழி: உடல் நலனைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களைக் கவர்ந்திழுக்க இயற்கை உரத்தில் விளைந்த காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் (ஆர்கானிக் ஃபுட்) என்று விளம்பரம் செய்து மிக அதிக விலைக்கு விற்கிறார்கள். இவர்களில் போலிகளை அரசாங்கம் தான் கண்டறிய முடியும்

பதிவு : மலர்91
நாள் : 12-Sep-14, 12:25 pm

மேலே