எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவளைக் கண்ட உடனே நினைத்தேன்... அவளின் மடியில் தவழும்...

அவளைக் கண்ட உடனே நினைத்தேன்...
அவளின் மடியில் தவழும் பொழுது நினைத்தேன்..
அவள் வாரி அணைக்கும் பொழுது நினைத்தேன்..
அவள் முத்தமிடும் பொழுது நினைத்தேன்..
அவளை
"அம்மா"
என்று அழைக்க...
ஆனால் முடியவில்லை...
அந்தோ..! பரிதாபம்..!!
நான் பிறந்து
இரண்டு வருடங்கள் கழித்து தான்
எனக்கு பேச்சு வந்தது..
மன்னித்துக் கொள் அம்மா..
உன்னை நாலாறு திங்கள்
காக்க வைத்ததற்கு..

பதிவு : மு.க.சரவணன்
நாள் : 2-Nov-14, 11:25 pm

மேலே