வெற்றி நமதே வெற்றி நமதே விடியலில் விழித்தாயிற்று, ஸ்நானமும்...
வெற்றி நமதே வெற்றி நமதே
விடியலில் விழித்தாயிற்று, ஸ்நானமும் முடிவாயிற்று.
ஆகாரம் அன்னையிட்டாள், வெற்றி திலகம் நெற்றியிலிட்டாள்.
பேரலைகள் ஓயலாம். வேங்கையின் மனம் ஓயாது.
எதிரிகள் எப்படியெல்லாம் ஓடி வருவார்களோ இன்று.
அடிக்கிற அடியில் தெரித்து ஓடவேண்டும் நன்று.
ஆயுதம் முழுக்க அழுக்கு.
இன்று தோற்றால் எனக்கு இழுக்கு.
அன்னையே போய் வருகிறேன், பந்து வாங்க காசு தா...