எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர் பி.எஸ் குழந்தைக்கு வாழ்த்து... செல்லமான பார்வை யிலும்...

தோழர் பி.எஸ் குழந்தைக்கு வாழ்த்து...

செல்லமான பார்வை யிலும்
சேதி யொன்று சொல்கின்றாய்
கள்ள மில்லா உன்மனதால்
களிப் புடனே வாழ்கின்றாய்

வஞ்ச மில்லா அழகினாலே
வாய் பொத்தி சிரிக்கின்றாய்
தஞ்ச மில்லா தேவதைகள்
தங்கி யதோ உன்னோடு

அவதரித்த நாளுக்காக தனி
அன்பு வாழ்த்து கிடையாது
ரசித்து மகிழ்வாய் நீயிருப்பாய்
ரஷிகா வாழும் நூறாண்டும்


எண்ணம், எழுத்து : ப்ரியன்
படம் : நன்றி_PHOTO BOYS

பதிவு : ப்ரியன்
நாள் : 3-Dec-14, 2:26 pm

மேலே