கடந்த வருடத்தின் கல்வீச்சுக்களென அமிழ்ந்திருக்கும் வலிகளைப் புலம்பெயர்க்கும் தானியங்கிப்...
கடந்த வருடத்தின்
கல்வீச்சுக்களென அமிழ்ந்திருக்கும்
வலிகளைப் புலம்பெயர்க்கும்
தானியங்கிப் பயணத்தைத்
தொடங்கவிருக்கின்றது
இரண்டாயிரத்துப் பதினைந்தின்
சக்கரங்கள்...
நிறம் மாறிய நகப்பூச்சின்
குன்றுகின்ற வளர்ச்சியினைப் போல்
விடுபட்ட வெற்றிடங்களைச்
சுமக்கலாம்
எனது கனவுகளும்
மீண்டுமான விழிப்பில்
விடியலுக்கான உதயத்தின்
கண்மணி உருட்டுவதற்கென
உறங்கலாம்....
வறுமையும் விரக்தியும்
யாருக்கும் சௌகரியமற்றதல்ல
பகல் இரவாய்
அரற்றிய கண்ணீர் குரல்களின்
மூடி மறைத்த பிம்பங்களை
விலக்கிக் கொண்டிருந்தது
புதியது என்பதான
புன்முறுவலில் வண்ணங்களுடன்
நாட்காட்டியின் முதற்பக்கம் ...
-புலமி
புத்தாண்டு புதிய தொடக்கமாய் அமையட்டுமாய் உளம் மலர்த்திய வாழ்த்துக்கள்........