எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆயிரம் ஆயிரமாய் தோரணங்கள்.... வாரணம் ஆயிரமாய் வானவேடிக்கை.... பழையது...

ஆயிரம் ஆயிரமாய் தோரணங்கள்....
வாரணம் ஆயிரமாய் வானவேடிக்கை....
பழையது தேடி...
புதியதை நாடி...
விளைய வைத்தவன் திண்டாட....
வாங்கி வித்தவன் கொண்டாட...
அடுப்பை மட்டும் பற்ற வைத்து ,
அரிசி வெல்ல பொங்கல் வைத்து,
கரும்பு சாறு புளிந்து,
உடல் மட்டும் நெளிந்து,
கொண்டாடும் அந்த நாள் பொங்கலோ...?
அல்லது பொங்கலா?
எதுவாய் இருப்பின்
வளமும் நலமும்....
அனைவரின் வாழ்வில் பொங்க...
என்னுடைய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....
இப்படிக்கு
அன்புடன்,
பண்புடன்,
நட்புடன்,
உங்களுடன்,
உங்களில் ஒருவன்,
மருதநாயகம்

நாள் : 13-Jan-15, 11:38 am

மேலே