எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னை பொறுத்தவரை திரு .பெருமாள் முருகன் ஒரு கோழை...

என்னை பொறுத்தவரை திரு .பெருமாள் முருகன் ஒரு கோழை என்றுதான் சொல்வேன் . விமர்சனம் .. எதிர்ப்பு இவைகளை கண்டு அஞ்சி ஓடுவது ஓர் எழுத்தாளனின் வீரம் அல்ல !!

சுயதம்பட்டம் என்று யாரும் நினைக்க வேண்டாம் ...!

இதே சென்னை புத்தக கண்காட்சியில் எனது முதல் நாவல் அடுத்த வருடம் காட்சிக்கு இருக்கும் . நிச்சயமாய் சர்ச்சை வெடிக்கும்... தெரிந்துதான் எழுதி வருகிறேன். என் கருத்து, என் எழுத்து சமூக மாற்றம் வேண்டி இருக்கும்... அது. .அரசியல், மத , ஜாதி தலைவர்களை தாக்கும். அப்போதும் நான் ஓடி விட மாட்டேன் .....! (இது நடக்கும்.. சத்தியம் )

இந்த தளத்தில் (எழுத்து.காம்).. .. என் தனிப்பட்ட நிகழ்வை ...கண்டித்து, என்ன ? எது என்று கூட என்னிடம் கேளாமல் . ஒரே இரவில் நட்பு அளவில் ஹீரோவாக(?) இருந்த என்மீது .. அடுத்த நாள் காலையில் இங்கு இருக்கும் பெரும்பாலான தோழர்கள் எச்சில் துப்பாத குறையாய் என்னை அவமான படுத்திய நிகழ்வும் உண்டு ..என் அளவில் .. நான் சந்தித்த விமர்சனம் ...அவமானம் .... புறக்கணிப்புகள் ஆகியனதான் என்னை ஒரு வலிமையான மனோநிலைக்கு கொண்டு வந்தது.

.அந்த அவமானம் தான் இந்த வருடம் எனக்கு தரப்பட்ட விருதை நான் புறக்கணித்தேன் .. ஆம் ...ஆம் ...!
அந்த அவமான வெறிதான் என்னை இப்பொது சினிமா துறைக்கு கொண்டு சென்றது ..

இன்னுமும் நான் முழுமையான எழுத்தாளனா என்றால் ... இல்லை என்று தான் சொல்வேன்.. ஆனாலும் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன் ... என் அடையாளத்தை நான் எப்போதும் விட்டு தருவது இல்லை ...! எனக்கு இருக்கும் தைரியம் ஒரு மூத்த எழுத்தாளர்க்கு ஏன் இல்லை ? தாளில் காட்டும் வீரம் .. களத்தில் எங்கு போனது...? வெறும் எழுத்து சவாடல் தானா திரு பெருமாள் முருகன் ?

இவர் எழுத்தாளன் எனும் சொல்லுக்கே லாயிக்கு இல்லாதவர் ...!


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 19-Jan-15, 5:56 pm

மேலே