எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகான காட்சிகள் பல கடந்து சென்றாலும் எதிலும் லயிக்க...

அழகான காட்சிகள் பல கடந்து சென்றாலும் எதிலும் லயிக்க வில்லை அவன் மனது...
மனம் முழுதும் ஏதோவொரு கவலை....
அந்த கவலைக்கு காரணம் வேறு ஏதுமில்லை ஒரு பெண் தான்...ஆம்.....
அவனது நேற்றைய காதலி இன்று குடிகாரன் ஒருவனின் மனைவி ......
அவள் இன்று எமனோடு போராடிக்கொண்டு வாழ்கிறாள்....
அவளுக்கு துணையாகவோ அல்லது துணிவு கொடுக்கவோ ஒருவரும் இல்லை.....
அனைத்து உறவுகள் இருந்தும் இன்று அனாதையாக வாழ்கிறாள் போலும்....
அன்று எத்தனையோ முறை என் காதலை எடுத்துறைத்தும் என்னை அவள் ஏற்றுக்கொள்ளவே இல்லை ......
இன்றும் அதைத்தான் செய்வாள் அதாவது என் உதவியை ஏற்க மறுப்பாள் .....
எப்படியேனும் அவளை குணப்படுத்த வேண்டும் ...
இப்படியான எண்ணங்களுடன் வந்து சேர்ந்தான்... தான் காதலித்த அப்பெண்ணின் வீட்டின் அருகில் .....
ஆம்... இவன் எண்ணியது சரியே ...... இன்றும் அவள் இவனது உதவியை ஏற்கவில்லை ..... ஆம் உதவியை ஏற்க அவள் அங்கு இல்லை ... மாறாக அழுகை மட்டுமே இருந்தது .... 
நான். அவளை காண வந்து பெருந்தவறு செய்து விட்டேன் ..... அவள் என் காதலை வெறுத்தாலும் என்னை ஒரு மனிதனாக என்றாவது ஒரு நிமிடம் என்னை பற்றி சிந்தித்திருப்பாள் என எண்ணினேன் ... ஆனால் அது தவறு.... அவள் நிஜத்தில் மட்டுமல்ல கனவிலும் என்னை காண விரும்பவில்லை .... அதனால் தான் நான் அவளை காணும் முன்பே சென்றுவிட்டாள்..... 
ஆனால் ..... மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால் அப்பொழுதும் காத்திருப்பேன் என் காதலி என்னை காதலிப்பாள் என்ற நம்பிக்கையில்.......















நாள் : 22-Aug-15, 1:10 pm

மேலே