எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்புத்தோழர் பழனி குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து. என்றென்றும் அன்பாய்...

அன்புத்தோழர் பழனி குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து. 

என்றென்றும் அன்பாய்
என்றென்றும் ஆதரவாய்
என்றென்றும் புன்னகையாய்
என்றென்றும் மழலையாய்
என்றென்றும் பகுத்தறிவாளராய்
என்றென்றும் தமிழ் நேசகனாய்
என்றென்றும் உதயச்சூரியனாய்
என்றென்றும் புதியமலராய்
என்றென்றும் இனிய நட்பாய்
என்றென்றும் வசீகர கவிஞனாய்
என்றென்றும் இவையனைத்தும்
ஒருசேர்ந்த நல்லதொரு மனிதராய்
ஒரே ஒருவரை என்மொழித் தாய்
செந்தமிழிடம் கேட்டேன். 

சற்றும் சிந்திக்காமல்
உணர்வலைகளை உருவாக்கிய
ஆழியளவையும் மிஞ்சுமளவு
அன்புள்ளம் கொண்ட பேரழகர்
ஐயா/ அண்ணன் பழனிகுமாரை
என் மனவிழியில் திரையிட்டாள்.

இவ்வாறு ஈராண்டுக்குமுன்
தமிழன்னை எமக்கு
அறிமுகப்படுத்திய
”தமிழ் கவிச்செம்மல்”
திரு. பழனிகுமாருக்கு
இன்று பிறந்தநாள். 

செந்தமிழ் கோலெடுத்து
திராவிடத்தேனில் நனைத்தெடுத்து
அன்போடு எழுதுகிறேன்.



என் இனியத் தோழா..!
அன்புச்  சகோதரா...!

வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நிம்மதியான ஆரோக்கியத்துடன்
நீடித்தப் புகழுடன்
தமிழ்மொழிப் போல
இனிமையாய் இளமையாய்
வாழ்வாங்கு வாழ  வாழ்த்துகிறேன். 

--
அன்பன்
இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 12-Oct-15, 12:48 am

மேலே