எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அதி அற்புதமான இலக்கியப் பறவைக்கு.. ஒரு நட்புச் சூரியனின்...

 அதி அற்புதமான இலக்கியப் பறவைக்கு.. ஒரு நட்புச் சூரியனின் வாழ்த்து. 


இவ்வுலகம் முழுவதும்

இவ்வுலகை விடியச்செய்வதும்

இருளச்செய்வதும்

ஒரே ஒரு சூரியன் தானே...! 


நானுமொரு கதிரவனே...!

சூரியனைப் போலிருக்கும்

உங்களைப்போல நானும் ஒருவனே..!

 

என் இதயவானில்

இதுவரையிலும் பல பறவைகள்

வந்ததுண்டு...புரிதலின்றி

என் மனவானத்தை

கொடூரமாய்,, கொடுமையாய்

வன்மக்கத்தியில்

கிழித்துச் சென்றதுண்டு.


எந்தன் தோழமையுணர்வுச் சூரியனின்

அன்பொளிச் சிறகுகளை

உதயமாக்கிடும் போதெல்லாம்

பல பறவைகள்

நட்புவிழியினில்

அன்பு இமை படபடக்க

எனையும்

கெளரவப்படுத்தியிருக்கின்றன.


ஒரு சில பறவைகள்

எனையும் அடையாளப்படுத்தியிருக்கின்றன.

அரிய சில பறவைகள்

எனையும்  அரவணைத்திருக்கின்றன.


இப்படியான பல பறவைகளில்

ஒரு பறவை

ஒரு கவிப்பறவை

என் கவிஜிப் பறவை

எனை கெளரவப்படுத்தி

அடையாளப்படுத்தி

அரவணைத்து அன்பூட்டி

சிறப்புச் செய்திருக்கிறது.


ஓர் உன்னத காதலியைப்போல

என்னிடம் அவ்வப்போது

ஊடலும் கொண்டிருந்தது.- பிறகு

ஒரு புரிதலான கைகுலுக்கலில்

கூடியும் இருக்கிறது.


இப்பறவைக்கு பல சிறப்புண்டு.

கவிதை எழுதுவோர் மத்தியில்

இப்பறவை கவிதையை செதுக்கும்.


கதை எழுதுவோர் மத்தியில்

இப்பறவை கதையை உருவாக்கும்.


இப்பறவையின் திரைக்கதை இயக்கத்தில்

எறும்பும் நடிக்கும்

போதியும் ஆசைப்படும்...

மலை பேசும்

மழை ஆடும், 

காடு கூத்தாடும்.


இப்பறவை..

நடிக்கும்.. வாழ்க்கையில் அல்ல,.

திரைபடத்திலும் புகைப்படத்திலும்..!


இப்பறவை

ஆடும்..ஆணவத்தில் அல்ல..

மேடையிலும்... மழையிலும்....! 


ஆம்... இப்பறவைக்கு

மனிதர் என்றும் பெயருண்டு.

மனிதர்களில் இப்பறவைக்கு

கவிஞர் என்றும் பெயருண்டு.

கவிஞர்களில் இப்பறவைக்கு

ஓர் அரியணையுமுண்டு. 


இன்று

இந்த தேதியில் பிறந்த

இப்பறவைக்காக

நட்சத்திரங்களை பகலில்

பூக்கச்செய்து...

நிலவினை இப்போதே

திரையிடச்செய்து


சூரியனாய் நான்

வாழ்த்துக் கதிர்களை

பொழிகிறேன்...!


வாழ்க நண்பனே... வாழ்க...!

நீடுழி வாழ்க...!

எதுவும் நிரந்தரமில்லா..

இவ்வுலகில்

நிரந்தரமானது ஒன்றே ஒன்றுதான்

வெண்ணிலாவும் தேய்ந்து வளரும்

அந்த வானத்தில்

இந்தச் சூரியன்..!


புரிந்துக்கொள்.... கவிஞனே...!

நான் சூரியன்....

செயற்கையாகவோ

இயற்கையாகவோ

மேற்கில் விட்டெறிந்தாலும்

கிழக்கில் உதயமாகிவிடுவேன்...

பறவை உனக்காக....

உனக்காவும்....!


கவிஜியெனும்

கவிப்பறவையே...!

உன் நட்புச்சூரியனின்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !


 **

-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 20-Oct-15, 9:27 am

மேலே