-----இன்றைய சிந்தனைக்கு---- ஆட்டுவிப்பார் ஆட்டுவித்தால் அரசியலும் குச்சுப்புடி பாரத...
-----இன்றைய சிந்தனைக்கு----
ஆட்டுவிப்பார் ஆட்டுவித்தால் அரசியலும்
குச்சுப்புடி பாரத நாட்டியம் ஆடும் !
ஒரு போட்டியின்னு வந்து விட்டால்
பாட்டியும் ஓட்டப் பந்தயத்திற்கு தயாராவாள் !
ஆட்டிறைச்சியும் மாட்டிறைச்சியும் இங்கே அரசியல்
ஆட்டுக்குத் தீர்ந்தால் குட்டிக்குத் தீரும் என்று சொல்லுவார்கள்
மாட்டுக்குத் தீரலாம்
ஐயோ பாவம் இந்த ஆட்டுக்கு ஒரு நாளும் தீராது !
இலையும் குழையும் தின்னும் ஆடு மனிதனுக்கு இரை
சோறும் பருப்பும் தின்னும் மனிதனுக்கு உணவுப் பற்றாக் குறை !
கூரையில் நின்னு விடிய விடியக் கூவிய கோழி
மதியத்தில் உணவு ----இன்னைக்கு அம்மாவாசி !
பாலும் முட்டையும் தினம் தரும்
ஆட்டையும் கோழியையும் மாட்டையும் அடித்துத் தின்னும்
மனிதன் மடியில் பூனைக்கும் நாய்க்கும் சிம்மாசனம்
எலும்புத் துண்டில் வாலாட்டும் நாய்க் குட்டி !
மியாவ் மியாவ் என்று கூவும் பூனைக் குட்டி !
டார்வின் சொல்லாத வாழ்க்கைத் தத்துவம் !
-----கவின் சாரலன்