புரட்சி வீரன் கவிஞ்ஞன் தன் சமூகத்துக்காய் தனது நுரையீரலால்...
புரட்சி வீரன்
கவிஞ்ஞன்
தன் சமூகத்துக்காய்
தனது நுரையீரலால்
சுவாசிப்பவன்
பேரவலம்
தென்படும்போதெல்லாம்
எழுத்துக்களால் அழுபவன்
அவனுக்கும் பசிக்கும்
அது ஏழையின் பசி
அவனுக்கும் வலிக்கும்
அது சமூகம்
வதைபட்டதன் வலி
அவனுக்கும் காதல் வரும்
அது இயற்கைமீதான காதல்
அவனுக்கு தினம்
மனம் வலிக்கும் அது
கவிதையை பிரசவிக்கும் வலி
கவிஞ்ஞன் உங்கள்
அனுபவத்தை எழுதுபவன்
சொந்த கதையை
எழுதுகிறானோ
என்று வினா எழுப்புவோரே
அவனுக்கு
சுய சரிதையும் எழுதத்தெரியும்
மறவாதீர்
கவிஞ்ஞன்
நேசிக்கப்படவேண்டியவன்
இலக்கியக்கோவிலில்
பூஜிக்கப்படவேண்டியவன்
அவன் ஒரு இலக்கிய
மனநோயாழி
கற்பனைகளே அதற்கு
மருந்து உங்களுக்கு
கிடைக்கும்
அதில் பிறக்கும்
கவிதையெனும்
இலக்கிய விருந்து
அநாதியன்
மார்க் ஜனாத்தகன்