“கோமூத்திரியே கூட சதுர்த்தம் மாலைமாற்றே எழுத்து வருத்தனம்நாகபந்தம் வினா உத்தரமே
காதைகரப்பே கரந்துறைச் செய்யுள்
சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்
அக்கரச்சுதகமும் அவற்றின் பால” - [தண்டியலங்காரம்: 98]
என்று சித்திரக்கவி பற்றிச் சொல்கிறது. அதாவது கோமூத்திரி, கூடசதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினாவுத்தரம், காதைகரப்பு, கரந்துறை செய்யுள், சக்கரபந்தம், சுழிகுளம், சருப்பதோபத்திரம், அக்கரச்சுதகமும் சித்திரக்கவிதை வகையைச் சேர்ந்தது என்கின்றது
முத்துவீரியம்“ ஏக பாதம் எழுகூற் றிருக்கை
காதை கரப்பு கரந்துறைச் செய்யுள்
கூட சதுக்கம் கோமூத் திரிமுதல்
தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியே”
என்று கூறுகின்றது.