எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாரதிதாசன் வரிகளில் புதைந்தவனை மீட்டெடுக்க மாற்று வரிகள். அவளும்...

பாரதிதாசன் வரிகளில் புதைந்தவனை மீட்டெடுக்க மாற்று வரிகள். 
அவளும் நானும்! அப்படியே, மற்றவை வித்தியாசம். 

திரைப்படம்: அச்சம் என்பது மடமையடா... 
பாடல் வரிகள்: பாரதிதாசன்
இசை: ஏ. ஆர். ரஹ்மான் 

அவளும் நானும், இசையும் செவியும்! 
அவளும் நானும், எழுத்தும் மையும்! 
அவளும் நானும், அன்பும் சிவமும்! 
அவளும் நானும், காம்பும் கனியும்! 

மதுவும் மயக்கமும், பொன்னும் கிழியும்! 
முடமும் வலியும், அவளும் நானும்! 

வடிவும் வண்ணமும், தடமும் தடயமும்! 
அவளும் நானும், அனிச்சையும் செயலும்! 

படகும் துடுப்பும், விழியும் ஒளியும்! 
குறளும் அடியும், உளியும் சிலையும்! 

சிறகும் தென்றலும், குழலும் குருதியும்! 
வினாவும் விடையும், நானும் அவளும். 

நானும் அவளும், கவியும் புனைவும்! 
நகமும் சதையும், மழையும் மயிலும்! 

அவளும் நானும் வகிடும் பொட்டும்! 
அவளும் நானும் பனியும் மலரும்! 
அவளும் நானும் காதலும் காமமும்!

பதிவு : சபிரன்
நாள் : 26-Jun-17, 10:57 pm

மேலே