சிந்தனை செய்மனமே..18.. வாழ்க்கைக்கு நம்புகின்ற தன்மையும் (believe), அதை...
சிந்தனை செய்மனமே..18..
வாழ்க்கைக்கு நம்புகின்ற தன்மையும்
(believe), அதை உணரும் பக்குவமும்
(feelings) மிக மிக அவசியம்.
இந்த இரண்டுமே, ஒருவகையில், நமது இதயத்திலிருந்து எழுகிறது என்று கூடச் சொல்லலாம்.
இந்த இரண்டும் நம்முள் எழும்போது,, அதற்கு அவ்வப்போது, பதில் சொல்லிக்கொண்டிருந்தால், அது வளர்ந்து கொண்டே இருக்கும்..
இவையிரண்டையும் உதாசீனப்படுத்தினால், அது இறந்துவிடும்.
இவையிரண்டுக்கும் மதிப்புக் கொடுத்தால், அது நம்முடைய இதயத்துடன் என்றுமே உறவாடிக்கொண்டிருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இதெல்லாம் கைகூடவேண்டுமென்றால், கடவுளின் அனுக்கிரமும் வேண்டும்.