எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதியோரைப் பேணுவோம் இன்று உலக முதியோர் தினம் ஆதரவற்ற...

முதியோரைப் பேணுவோம்

இன்று உலக முதியோர் தினம் 
ஆதரவற்ற முதுமையடைந்த நம் தெய்வநிலை குணம் கொண்டவர்களை  காக்க  அன்பு இல்லங்களை நம் ஒவ்வொரு கூட்டு குடும்பங்களை நாம் உருவாக்குவோம்
நாளைக்கு நாமும் முதுமை அடைவோம்
முதியோர் ஆரோக்கிய நலன் காப்போம் 
அயல் நாட்டினரும் வியக்கும் வண்ணம் நம் கூட்டுக குடும்பப் பாசம் சிறப்பு அடைய வேண்டுகிறேன் 
முதியோர் நலன் உலகம் எங்கும் சிறக்க நாம் ஆவண செய்வோம் 
முதியோர் நலன் கருதி மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு திட்டங்களை உடனடியாக சிறப்பாக அமைக்க பாடுபடுவோம் 
முதியோரை மதிப்போம்
குடும்பம் ,சமூகம்,நாட்டுக்கு முதியோர் ஆற்றிய பணிகளை எண்ணி அவர்களது அறிவு,ஆற்றல் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவோம் 
முதியோர் மருத்துவமனைகள் பல திறந்து முதியோர் நலன் காப்போம் 
முதியோர் தினத்தில் முதியர் நல  வாழ்வுத திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவோம்
தாத்தா பாட்டி முதியோர் பாசத்தை நம் குழந்தைகளுக்கு நாம் எடுத்துக் கூறுவோம்
தாத்தா பாட்டி கதைகளை இனியாவது குழந்தைகள் கேட்க ஆவண செய்வோம்
பழமையான நம் முதியோர் கலாச்சாரம் பேணுவோம்

வேலாயுதம் ஆவுடையப்பன் 


!

நாள் : 1-Oct-17, 12:15 pm

மேலே