எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மூலிகை மருத்துவம் - கீழாநெல்லி தமிழ் நாட்டில் அநேகருக்கு...

மூலிகை மருத்துவம் - கீழாநெல்லி

தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை  கீழாநெல்லியாகத்தான் இருக்கும் .மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி  என்று பலரும் இலவச வைத்திய முறை மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டதும் கூறுவார்கள் . ஆனால் அணுபான  முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது .கீழாநெல்லி  மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில்  பயன்படுகின்றது. நமது சித்தர்கள் தமது சித்தத்தை அடக்கி, ஞானத்தை பெருக்கி உடம்பை வளர்த்து உயிரை வளர்க்கும் உபாயத்தை நமக்கு அன்புடன் விட்டுசென்றுள்ளனர் . ஆனால் நாம் ஆங்கிலேயரின் ஆட்ச்சியில் இருந்தபோது இததகைய பாரம்பரிய உயர் மருத்துவ முறைகளை உதாசீனப்படுத்திவிட்டோம். அவைகளை தொகுத்து வைக்க மறந்து விட்டோன். பலாயிரக்கனக்கான ஓலை சுவடிகள் படிஎடுக்கப்படாமல் ஆடிப்பெருக்கில் ஆற்றினில் விடப்பட்டது ..சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மூலிகைகள்தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் இல்லை என்றே கூறலாம். ஒவ்வரு உள்ளுருப்பையும்  பாதுகாக்க ஒவ்வரு மூலிகைகைகளை நமது சித்தர்கள் நமக்கு காட்டிச்சென்றுள்ளனர் .
  சிறுநீரகத்தைக் காக்கும்.சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை,   நெருஞ்சில், அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி மற்றும் அதன் வகைகள், ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி, கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம், புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும், நித்திய  கல்யாணியும், இதயத்திற்கு செம்பருத்தி,  மூளைக்கு வல்லாரை என  இவ்வாறு வகைப்படுத்தி உள்ளனர் .இதில் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு கீழாநெல்லிதான் காக்கும் நண்பன். மிகக் கொடிய நோய்களுக்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில்இருந்தாலும்கூட,  முதலில் வேர் பாரு, தழை பாரு மிஞ்சினா மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரு' என்பது சித்தர்களின் வழி. இலைகளில் இருக்கும் வைத்திய முறைகள், நோய்களை வராமல் தடுக்கும் இயற்க்கை முறை. உணவிலேயே சரிப்படுத்த நாம் எடுக்கும் முதல் வழி.
  இதன் வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 3-Oct-17, 4:50 pm

மேலே