(கர் ) நாடகம் : கடந்த வார முடிவில்:...
(கர் )நாடகம் :
கடந்த வார முடிவில்:
ஓய்ந்தன
பெருத்த எதிர்பார்ப்பில்களங்கள் பல கண்ட
கருநாடக தேர்தல்கள்
ஒடுங்கின
மத இன ரீதி பிரச்சாரங்கள்
ஏது ஆகுமோ என்கின்ற
மிரட்சியில் கட்சிகள்
இவ்வார இறுதியில் :
நுழைந்தது
நியாயம் வெல்லவே தலையிட்ட உச்சம்..
தல யார் என தள தேர்வு காட்டும் மிச்சம்
: கடையநல்லூரான்