வணக்கம் எம் அன்பு தமிழ் உறவுகளே..... இன்று தமிழகத்தில்...
வணக்கம் எம் அன்பு தமிழ் உறவுகளே.....
இன்று தமிழகத்தில் வெகு விமர்சையாக விஜய் தொலைக்காச்சியில் ஓர் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது அதைப்பற்றிதான் இன்று பேசபோகின்றேன்.
அதாவது விஜய் தொலைக்காட்சிக்கும் எனக்கும் எந்த ஒரு தனிப்பட்ட விரோதமும் இல்லை பொதுவான கருத்துக்கள்தான்.
இன்று உலகத்தில் தவிர்க்கமுடியாத பொழுதுபோக்கு என்றால் தொலைக்காட்சிகளும் கைப்பேசியும்தான் அந்த வகையில் பார்க்கும்பொழுது பெரும்பாலான மக்கள் தொலைக்காட்சியில்தான் மூழ்கி கிடக்கின்றனர்.அப்போ ஒரு தொலைக்காச்சி நிறுவனம் என்ன செய்ய வேண்டும் அந்த மக்களின் வாழ்வியல் முறைகளுக்கும்,கலாச்சார முறைகளுக்கும் ஏற்ற நிகழ்ச்சிகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் ஆனால் அப்படி இங்கு நடப்பதில்லை.
விஜய் தொலைக்காட்சியில் முதலில் ஓர் நிகழ்ச்சியை எடுத்துக்கொள்ளலாம்.ரெடி ஸ்டெடி கோ என்ற நிகழ்ச்சியை யாரும் கண்டதுன்டா?
இன்று உணவு என்ற பொருள் எவ்வளவு முக்கியம் என்று தெரியும் அதை உற்ப்பத்தி செய்யவது என்று ஓர் விவசாயிக்கு தெரியும்.ஆனால் அந்த நிகழ்ச்சியில் எவ்வளவு உணவுகள் வீணடிக்கின்றனர்.உணவுகளை வீணடிக்காதீர்கள் என்று தொலைக்காச்சியில் வசனங்கள் மட்டும் கூறினால் போதுமா?அதை கடைபிடிக்க வேண்டாமா?
இதை எதிர்த்து ஏன் எந்த ஒரு அமைப்புகளும் இதை தட்டி கேக்க ஏன் முன் வரவில்லை?பயமா?
சரி அது போகட்டும் இரண்டாவதாக இப்போது ஓர் நிகழ்ச்சி பிக்பாஸ் இது அவசியம்தானா?
சரி யாராவது ஒருவர் என் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்.
பிக்பாஸ் வீட்டில் சென்றுள்ள யாராவது ஒருவர் இந்த மண்ணிற்க்காக போராடியவர்களா?
இவர்கள் நல்லவரா கெட்டவர்களா என்று தெரிந்து என்ன பயன் நமக்கு?
இவர்கள் நல்லவர்களா இருந்தா நம்ம என்ன செய்ய போகிறோம்?
கெட்டவர்களா இருந்தா என்ன செய்ய போகிறோம்?
நல்லவர்கள் என்று தெரிந்தால் இவர்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்க போகின்றோமா?
கெட்டவர்கள் என்று தெரிந்தால் மரண தன்டனை கொடுக்க போகின்றோமா?
எதற்க்காக இவர்கள் நல்வர்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்?
இன்னொரு விசயத்தை நன்கு கவனியுங்கள் யருமே தன் சுய ரூபத்தையும் மற்றும் பொது மக்களிடம் கெட்ட பெயர் வாங்குமாறு விசயங்களை செய்யமாட்டார்கள் அப்போ ஏற்க்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி எல்லாம் தெரிந்தும் முன் வருகின்றனர் என்றால் அவர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள் அதாவது சுருக்கமாக கூறவேண்டுமென்றால் பணம் பத்தும் செய்யும்.அதுமட்டுமல்ல அந்த நிகழ்ச்சியில் அவர்கள் அணியும் உடைகள் பேசும் பேச்சுகள் எல்லாம் படு கேவளமாக உள்ளது எத்தனை குழந்தைகள் எத்தனை குடும்பங்கள் இந்த நிகழ்ச்சியை கண்டுகொண்டிருக்றது அதற்க்கு ஏற்றவாறு நிகழ்ச்சியை கொடுக்கவேண்டாமா?
சிம்பு பீப் பாடலுக்கு எதிர்த்து வந்த அந்த கூட்டங்கள் எல்லாம் இப்போ எங்கே போனது.இது உங்கள் குழந்தைகளை கெடுக்காதா?
சரி இதையெல்லாம் தான்டி ஒரு விசயம் நடந்து என்னவென்றால் நாம் ஜல்லிக்கட்டு பிரச்சனையில் அன்னிய நாட்டு குளிர்பானங்களை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை தூத்துக்குடி பிரச்சனையின்போது பெப்சி,மாசா 1.5 லிட்டர் 65ரூபாய் என்று தமிழகத்தில் மீண்டும் அந்த குளிர் பானங்களை கொண்டு வந்துவிட்டான்.இதையெல்லாம் யாராவது கேட்டோமா அதை மறக்க பிக்பாஸ் வந்தாச்சு பின்ன எப்படி கேட்பது அப்படிதானே.இதுபோன்ற நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளும் தான் இன்று தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கின்றது.
என்றும் எம் உயிர் தமிழோடு...
சோ.முத்துப்பாண்டி.