எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கிறாள். நான்...

அவள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கிறாள்.
நான் சென்னை எனும் நகரத்தில் வசிக்கிறேன்.
நான் யார் என்று தெரியாமல் என் வாழ்க்கையில் நுழைந்தவள் அவள்!
நான் அவளுடன் பழகி ஒரு வாரங்கள் கூட முடியவில்லை,.
ஆனாலும் என்மீது அவள் பாசத்திற்க்கு எல்லை இல்லை.
என் பள்ளி நாட்களிலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி
அவளை போல் ஒரு தோழியை நான் சந்தித்ததில்லை!
ஆனாலும் நான் அவளை நேசித்தேன்,
அவளை பற்றி தெரியாமலே.

மாதங்கள் பல சென்றது.
அப்போது, அவள் என் மீது கோபம் கொண்டாள், என் மீது உரிமை கொண்டாடினாள்,
அப்போது அவள் என்னை இன்னும் பல மடங்கு நேசிக்கிறாள் என்று உணர்ந்தேன்.
அவளுக்கு என் மீது நட்பா, அன்பா, காதலா என்று தெரியவில்லை.
ஆனாலும் நான் அவளின் அன்பை கண்டு வியந்தேன்!
அந்த நொடியில் நான் அவளை பல மடங்கு நேசிக்க தொடங்கி விட்டேன்.

அவள் நட்பை தொடங்கி ஒரு வருடம் முடிந்தது.
அந்த ஒரு வருடத்தில் அவளை பற்றி நான் நன்கு புரிந்து கொண்டேன், அதே சமயம் அவளை நான் காயப்படுத்தியும் இருக்கின்றேன்.
அவள் காயம் பட்டிருந்தாலும் அதை என்னிடம் காட்டுவதில்லை.
நான் அவளிடம் பேசும் சில நிமிடங்கள் கூட அவள் நேசிக்கிறாள் என்று சில நாட்கள் பிறகு உணர்ந்தேன்.

இரண்டு வருடங்கள் முடிந்தது,

அப்பொழுது அவளுக்கு திரும

அப்பொழுது அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆனது.
அவள் என்னிடம் கொண்ட அன்பு ஒரு துளி அளவும் குறையவில்லை,
இன்னும் பல மடங்கு நேசித்தாள்.

ஆனால் நான் அவள் திருமணத்திற்கு கூட செல்லவில்லை,

அவள் என் மீது கோபம் இருந்தாலும், என் நிலையை புரிந்து கொண்டாள்.

என் வாழ்க்கையில் மகிழ்ச்சி எனும் மழையை அழகாக தெளித்தவள் அவள்..!!

அவள் என் அன்பு தேவதை!
அவள் என்  அன்பு இராட்சசி!
இவற்றை விட என் என் தோழி!!.

இதுவரை அவள் ஒரு முறை கூட என்னை சந்தித்ததில்லை,
நானும் அவளை ஒருமுறை கூட சந்தித்ததில்லை.

இந்நாள் வரை எங்கள் நட்பு சந்திக்கும் அந்த தருணத்திற்காக காத்திருக்கின்றோம்...

பதிவு : சந்தியா
நாள் : 5-Jan-20, 11:05 pm

மேலே