எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*உலக நடப்பு* நாட்காட்டியின் துகிலுரிப்பில் சுழலும் காலச்சக்கரம் !...


                *உலக நடப்பு*

நாட்காட்டியின் துகிலுரிப்பில்
சுழலும் காலச்சக்கரம் !

நிகழ்வுத் தொகுப்பின்
நீள்வரிசை பாதையில்
நியாயங்கள் நிற்கவில்லை !

சாதிகள் இல்லையடி
என்றான் பாரதி !
சங்கம் வைத்திங்கு 
வளருதே சாதித்தீ !

பெண்ணியம் பேசுவர்
பெண்மையும் புகழுவர் 
கூடாச்செயல் பலவும்
கூடியே செய்தே
கொடுமையும் புரிவர் !

அன்பும் அமைதியும்
அனைத்து உயிர்க்கும்..
அறிவுரை தந்தன
அனைத்து மதங்கள் !

குரோதம் விரோதம்
மனதில் விதைத்து
மதமே  பிடித்து
ஒங்குதே  பிடிவாதம் !

பசுந்தரை பரப்பில்
உதைபடும் பந்து
உதைக்கும் காலின்
நிறவெறி பார்க்கவே 
காற்றிலா பந்து !

விரலில் மைவைத்து
காதில் பூவைக்கும் 
வித்தையே நடக்குது
இதுவே வாடிக்கை
அரசியல் வேடிக்கை !

எதுவும் செய்யாதென
எகத்தாளம் எதற்கு ?
வைரஸ் பாய்ந்திட
வையகம் தாங்குமோ ?

பூமியில் ‌நிற்கும்
போதி மரங்கள்
இனியொரு புத்தனை
தேடித் தோற்றன !
         -- திரு.

பதிவு : Thiru
நாள் : 26-Feb-20, 4:31 pm

மேலே