எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொரோனா என்கிற இந்த வைரஸால் உலகத்தையே புரட்டிப் போட்டு...

கொரோனா என்கிற இந்த வைரஸால் உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. சாமானியன் முதல் கோடீஸ்வரன் வரையில் அவரவர் நிலைக்கேற்ப வாழ்க்கை பாதித்து விட்டது. நமது கண்ணுக்குத் தெரியாத, அறிவியல் உலகமே அறியாத இந்தக் கொடிய கிருமிகள் மக்களின் இயல்பு நிலை அடியோடு மாறிவிட்டது. சரியாகச் சொல்வதானால் வாழ்வாதாரத்தை தலைகீழாக கவிழ்த்து,  ஒரு நீண்ட போராட்டத்திற்கு அனைவரையும் தள்ளிவிட்டது. 



இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நிலையையும் மறக்க செய்து, புதிதாக வாழ்ந்திட ஒரு ஆரம்பத்தைத் தேடுகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறது. சாதாரணமாக நடந்து செல்கிறவன் தடுமாறி விழுந்தால் கூட எழுந்து தனது நடையை தொடர முடியும். ஆனால் அவனே அகல பாதாளத்தில் வீழ்ந்து விட்டால் அது ஆபத்தை விளைவிப்பது மட்டுமன்றி அவன் இயல்பு நிலைக்கு திரும்புவது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் மீண்டும் பிழைத்து வருவது கேள்விக்குறிய ஒன்றாகும். 


தற்போது நிலவிடும் அசாதாரண சூழ்நிலை கற்பனையில் கூட நாம் காணாத ஒன்று. இந்த அல்லல்படும் நிலை மறைந்து அவலங்கள் நீங்கிட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். 


பழனி குமார்    
   21.05.2020  

நாள் : 22-May-20, 7:12 am

மேலே